தளபதி விஜய் ஆரம்ப காலத்தில் பல்வேறு விமர்சனங்களை சம்மதித்தார், முதலில் அப்பா மூலமாதான் சினிமாவிற்கு வந்ததாக பல விமர்சனங்கள் பெற்ற பின்பு அவரது உருவத் தோற்றத்தை வைத்து பல்வேறு விமர்சனங்களை செய்ய ஆரம்பித்தனர். அனைத்து வலிகளையும் தன் மனதில் வைத்துக்கொண்டு சினிமாவில் ஜெயிக்க போராடினார்.
பேட்டியில் பேசிய இயக்குனர் விக்ரமன் விஜய் உடைய படங்களை எதுவுமே நான் பார்த்ததில்லை என கூறினார். அதாவது எல்லார் போலவும் எனக்கும் விஜய்யை ஆரம்பத்தில் பார்க்கும்போது அவரது அப்பா இயக்குனர் என்பதால் இவர் சினிமாவுக்கு வந்து விட்டார் என நினைத்தேன். ஆனால் அவருடைய சினிமா வளர்ச்சி பார்க்கும்போது தற்போது பிரம்மிப்பாக இருப்பதாக கூறியுள்ளார்.
பூவே உனக்காக படத்தில் அவரை தேர்வு செய்வதற்கு முன்பு வரை அவருடைய படங்களை நான் எதுவும் பார்த்ததில்லை. ஆனால் ரசிகன், தேவா போன்ற படங்களில் இவரது பாடல்கள் நடனத்தை மட்டும் பார்த்துவிட்டு இவருடைய ரியாக்ஷன்ஸ் நல்லா இருக்கிறது என நினைத்து தான் பூவே உனக்காக படத்தில் அவரை கதாநாயகனாக நடிக்க வைத்தேன் என கூறினார்.
ஆனால் அப்போதே நடிப்பு, டான்ஸ், ஃபைட் என அனைத்திலுமே திறமை கொண்டிருந்தார். அப்போது கிட்டத்தட்ட 200 படங்கள் நடித்த ஒரு நடிகருடைய நடிப்பு அனுபவம் அவரிடம் பார்த்ததாகக் கூறினார். மேலும் வசனமும் நடனம் எதிலுமே அவர் 2வது டேக் வாங்கியதே கிடையாது. எல்லா விஷயத்துலயும் ஒரே டேக்கில் முடித்து விடுவார். அனைத்து திறமைகளையும் கொண்ட ஒரு தலை சிறந்த நடிகர் என கூறினார்.
நீண்ட வசனமாக இருந்தாலும் அதனை மனதில் ஏற்றிக்கொண்டு ஒரே டேக்கில் செய்து முடித்து விடுவார். அதேபோல் எவ்வளவு கடினமான ஸ்டெப்பாக இருந்தாலும் அதனை அசால்டாக ஆடி விடுவார் என கூறினார். அதையெல்லாம் பார்த்து நான் அசந்து போனதாக கூறினார்.
மேலும் அவரது திறமையைப் பார்த்த விக்ரமன் பல தயாரிப்பாளரிடம் இப்போது இந்த பையனை புக் செய்து படங்கள் தயாரித்துக் கொள்ளுங்கள் ஏனென்றால் பிற்காலத்தில் இவர் ஒரு பெரிய ஸ்டாராக வளர்ந்து விடுவார். அப்போது நீங்கள் அவரைத் தேடி போகிறீர்கள் எனக் கூறினேன் தற்போது தான் சொன்னது போலவே நிறைவேறி விட்டதாகவும் தெரிவித்தார்.