விஜய் டிவியில் ஒவ்வொரு ஆண்டும் தங்களின் தொலைக்காட்சியில் பணியாற்றும் பிரபலங்களை கௌரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 7-வது ஆண்டாக விஜய் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் போன்றவற்றில் பலர் தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் சிறந்தவர்களுக்கு விருது கொடுத்து கௌரிவிக்கப்படுகிறது. தற்போது இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி தொடர் பல விருதுகளை வென்றுள்ளது.
விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. இத்தொடர் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகிறது. சிறந்த தந்தைக்கான விருதை பாக்கியலட்சுமி தொடரில் கோபியின் தந்தை ராமமூர்த்தி பெற்றுள்ளார்.
மேலும், சிறந்த வில்லன் கதாபாத்திரத்திற்காக விருதை கோபி பெற்றுள்ளார். இது கோபி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலர் கோபிக்காவே இத்தொடரை பார்க்கிறார்கள். ஆனால் கோபியை வில்லன் ஆக்கியது தான் ரசிகர்களை கொஞ்சம் அதிர்ச்சி அடையச் செய்தது.
சிறந்த நடிகைக்கான விருதை பாக்கியலட்சுமி தொடரின் கதாநாயகி பாக்யா பெற்றார். மேலும், சிறந்த துணை நடிகருக்கான விருதை எழிலும், சிறந்த துணை நடிகைக்கான விருதை ராதிகாவாக நடித்து வரும் ரேஷ்மாவும் பெற்றுள்ளார்.
மேலும் பாக்கியலட்சுமி தொடரின் இயக்குனர் டேவிட்க்கும் சிறந்த இயக்குனருக்கான விருதும் கிடைத்தது. இவ்வாறு பாக்கியலட்சுமி தொடர் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் பல விருதுகளை தட்டிச் சென்றுள்ளது. இது பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.