விஜய் டிவியில் இந்த ஆண்டிற்கான விஜய் டெலிவிஷன் அவார்ட் வழங்கப்பட்டு சின்னத்திரை பிரபலங்கள் கௌரவிக்கப்பட்டனர். இந்த விருது வழங்கும் விழாவில் யாருக்கு சிறந்த நடிகர் நடிகை விருது, அதைப்போல் யாருக்கு சிறந்த மாமியார், அம்மா விருது வழங்கப் போகிறது என ரசிகர்களும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருப்பர்.
அவ்வாறு இருக்க அதில் இரண்டு வருடங்களாக சீரியலில் சிறந்த அம்மாவிற்காக விருது பாக்கியலட்சுமி சீரியலின் கதாநாயகி சுசித்ராவிற்கு கிடைத்திருக்கிறது. பாக்யா கதாபாத்திரத்தில் தனது கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் சுசித்ரா தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் பாராட்டைப் பெறுகிறார்.
இந்த சீரியல் பெங்காலி மொழியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘ஸ்ரீமோயி’ என்ற சீரியலின் மறுபக்கம். ஆகையால் டேவிட் இயக்க சுசித்ரா முன்னணி கதாபாத்திரத்தில் இல்லத்தரசிகள் படும்பாட்டை கண்முன் தத்ரூபமாக வழிகாட்டுகிறார்.
தமிழ் ஓரளவு மட்டுமே தெரிந்த சுசித்ரா பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியமாகவே அசத்தலாக நடித்து வீட்டு வேலைகளையும் குடும்பத்தையும் மட்டுமே பார்க்கும் பெண்களை பார்க்கும் சமூகத்திற்கு சரியான பாடம் புகட்டுகிறார்
அத்துடன் இதில் பாக்யா தன்னுடைய சுயமரியாதையை எப்படி போராடி மீட்டெடுக்கப் போகிறார் என பார்ப்பதற்காகவே எக்கச்சக்கமான ரசிகர்கள் இந்த சீரியலுக்கு இருக்கின்றனர். அதற்கு ஏற்றார் போல் விஜய் டிவியின் டிஆர்பியை ஒருபுறம் தூக்கி நிறுத்தி உள்ளது இந்த சீரியல்.
அப்படி இருக்கும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு கிடைத்திருக்கும் இந்த கவுரவம் சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுவதுடன் சுசித்ராவிற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.