சமீபத்தில் 67 ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது. அந்த விருதை ரஜினி, வெங்கைய நாயுடு கைகளால் பெற்றார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினி தான் திரைத்துறைக்கு வரக் காரணமாக இருந்த இயக்குனர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார். அதில் தன்னுடைய குரு கே பாலச்சந்தர் அவருக்கு நன்றி கூறினார். குறிப்பாக, தனது திறமையை கண்டு பிடித்து தன்னுடன் பணியாற்றிய நண்பனுக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்து இருப்பார்.
ரஜினிகாந்த் கர்நாடகாவில் பஸ்கண்டக்டராக இருக்கும்போதே அவருடன் இணைந்து பஸ்டிரைவராக பணிபுரிந்தவர் ராஜ்பகதூர். அப்போதே ரஜினி ஸ்டைலாகவும், துடிப்பாகவும் இருப்பாராம். இதைப்பார்த்த ராஜ்பகதூர், ரஜினிக்குள் இருந்த நடிப்பு திறமையை அடையாளம் கண்டு சினிமாவில் சேர வற்புறுத்தியுள்ளார்.
மேலும் ரஜினி அந்த நிகழ்ச்சியில் என்னை பெரிய ஆளாக்கிவிட்டவர் ராஜ் பகதூர் தான் என பெருமையாக பேசினார். ராஜ்பகதூர், ரஜினி தாதா சாகேப் பால்கே விருது வாங்கியதற்காக தன் குடும்பத்துடன் சென்னை உள்ள ரஜினி வீட்டுக்கு சென்று அந்த நிகழ்வை கொண்டாடியுள்ளார்.
ஆரம்பத்தில் ரஜினிக்கு சரளமாக தமிழ் பேசவும் ராஜ்பகதூர் கற்றுக் கொடுத்துள்ளார். நன்றி மறவாத ரஜினி தன்னுடைய படத்தில் ராஜ்பகதூர் நடிக்க வைத்துள்ளார். ரஜினி நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட்டான படையப்பா படத்தில் ராஜ்பகதூரை நடிக்க வைத்து ரஜினி அழகு பார்த்திருப்பார்.
இப்படத்தில் ரஜினியின் பிறந்த நாள் விழாவில் அரசியல்வாதியாக வந்து அனைவரது கவனத்தையும் ராஜ்பகதூர் ஈர்த்தார். மேலும் ராஜ்பகதூர் இக்கு கே எஸ் ரவிகுமார் டப்பிங் கொடுத்திருப்பார். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக ரஜினி, ராஜ்கபூர் நட்பு பலமாக உள்ளது.