மாஸ் ஹீரோவா இருந்தா போதுமா.? தனுஷ் மீது கடும் கோபம், ஹாட்ஸ்டார் எடுத்த அதிரடி முடிவு

தனுஷ் சினிமாவில் ஆரம்பத்தில் சறுக்கினாலும் அதன் பின்பு சுதாரித்து கொண்டு நடிப்பில் கவனம் செலுத்தி தனக்குரிய கதாபாத்திரத்தை சீரும் சிறப்புமாக நடித்து வந்தார். இதனால் தொடர்ந்து பல வெற்றிப் படங்களையும் கொடுத்தார். இவர் நடிப்பில் வெளியான அசுரன், கர்ணன் போன்ற படங்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது.

தனுஷ் பள்ளி மாணவனாக நடித்தாலும் சரி, இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாக அசுரன் படத்தில் நடித்தாலும் அந்த கதாபாத்திரத்திற்கு எது தேவையோ அதை திறம்பட செய்வதில் தனுஷ் வல்லவர். தற்போது தனுஷ் கோலிவுட்டை தாண்டி ஹாலிவுட், பாலிவுட் படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் மாறன். இப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கியிருந்தார். இப்படத்தில் மாளவிகா மோகன், சமுத்திரகனி, வெங்கட்ராம்கி போன்ற பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

மாறன் படத்தை பிரபல நிறுவனமான ஹாட்ஸ்டார் வாங்கி ஒடிடியில் வெளியிட்டது. ஆனால் மாறன் படம் மிகப்பெரிய அடி வாங்கியது. ஏனென்றால் மாறன் படம் போட்ட முதலை கூட எடுக்க முடியாத அளவுக்கு மோசமான தோல்வியை சந்தித்தது.

தனுஷின் படங்கள் தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்தவுடன் ரசிகர்கள் மத்தியிலும் ஏகோபித்த வரவேற்பை பெற்று வந்தது. இதனால் மாறன் படமும் மிகப்பெரிய வசூலை ஈட்டி தரும் என ஹாட்ஸ்டார் இதை வாங்கியிருந்தது. ஆனால் மாறன் படத்தால் பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளது.

இதனால் மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள நடிகர் மற்றும் மாஸ் நடிகர்களின் படமாக இருந்தால் மட்டும் போதாது எல்லா படத்தையும் போட்டு பார்த்து அலசி, ஆராய்ந்துதான் இனிமேல் படங்களை வாங்க வேண்டும் என ஹாட் ஸ்டார் நிறுவனம் முடிவு எடுத்துள்ளது. மாறன் படத்தில் ஏற்பட்ட அடியால் ஹாட்ஸ்டார் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.