நடிகர் சூர்யா தன்னுடைய திறமையான நடிப்பால் ஒரு நிலையான இடத்தை தற்போது பிடித்துள்ளார். சமீபத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படம் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை.
தற்போது சூர்யா கதைக்க முக்கியத்துவமுள்ள படங்களில் நடித்து வருகிறார். இன்னிலையில் சூர்யா மூன்று வேடங்களில் நடித்து வெளியான திரைப்படம் 24. இப்படத்தை விக்ரம் குமார் இயக்கி வந்தார். இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்திருந்தது.
இப்படத்தில் சமந்தா, பிரபு, நித்யா மேனன் மற்றும் பலர் நடித்திருந்தனர். 24 படம் ஒரு டைம் ட்ராவல் கதையை கொண்டிருந்தது. அதாவது 24 மணி நேரங்களில் முன்னோக்கியும், பின்னோக்கியும் தனக்கு விரும்பிய நிகழ்வுகளை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும்.
இப்படத்தில் ஆத்ரேயா என்ற வில்லன் கதாபாத்திரத்தில் சூர்யா தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மிரட்டியிருப்பார். இந்த கதாபாத்திரத்திற்காக உலகத்தையே ஆட்டிப் படைத்த ஹிட்லர் பயன்படுத்திய துப்பாக்கியை சூர்யா பயன்படுத்தியிருந்தார்.
மேலும், அந்தப் துப்பாக்கி தான் வேண்டும் என சூர்யா அடம்பிடித்தாராம். ஏனென்றால் இது டைம் ட்ராவல் படம் என்பதால் 1939 ஆம் ஆண்டு ஹிட்லர் உபயோகித்த துப்பாக்கியை இதில் சூர்யா பயன்படுத்தியிருப்பார். அந்த துப்பாக்கி மௌசர் c96 என்ற ரக துப்பாக்கி தான்.
24 படத்திற்காக இவ்வளவு மெனக்கெட்டு செஞ்சு எந்த புரோஜனம் இல்லை. ஏனென்றால் ரசிகர்கள் மத்தியில் அந்தளவு இந்தப்படம் எடுபடவில்லை. 24 படத்திற்காக பல செலவுகள், சிரமங்கள் இருந்து எடுத்தாலும் ஒரு சில காரணங்களால் படம் எதிர்பார்த்த அளவு போகாமல் நஷ்டத்தை சந்தித்தது.