வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

எழிலை தூக்கி எறியும் குடும்பம்.. கேவலமான செயலில் ஈடுபடும் கோபி!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் இளைய மகனாக நடிக்கும் எழில் போன்று தனக்கு ஒரு மகன் இருந்தால் எப்படி இருக்கும் என சின்னத்திரை ரசிகர்கள் ஏங்கும் அளவுக்கு எழிலின் கதாபாத்திரம் பார்ப்போருக்கு ஆசையை தூண்டுகிறது.

ஏனென்றால் எழில் தன்னுடைய அம்மாவை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல், வேறொரு பெண்ணிடம் தொடர்பு இருக்கும் அப்பாவை பற்றி அம்மாவிடம் தெரியப்படுத்தாமல் குடும்ப சந்தோஷத்திற்காக தனக்குள்ளே புழுங்கிக் கொண்டிருக்கிறான்.

இதனால் எழில் எடுத்த முதல் திரைப்படத்தை பார்ப்பதற்காக வீட்டில் இருப்பவர்களை அழைத்து சென்றபோது, அப்பாவை மட்டும் வர வேண்டாம் என கோபியிடம் சொல்லி தன்னுடைய கோபத்தை எழில் சாந்த படுத்திக் கொண்டான். எனவே படத்தைப் பார்த்த பிறகு எழிலை அவருடைய குடும்பம் வெகுவாக பாராட்டினாலும், கோபியை ஏன் வரவில்லை என வீட்டில் இருப்பவர்கள் கேட்கின்றனர்.

அதற்கு கோபியும் எழிலை மாட்டி விடும் அளவுக்கு கேவலமாக போட்டுக்கொடுத்துவிட்டான். எழில் என்னை வரக்கூடாது என சொன்னதால் தான் நான் வரவில்லை என்று கோபி சொல்லிவிட்டான். வீட்டில் இருப்பவர்களும் எழில் எதற்காக அப்படிச் சொன்னாள் என்பதை கேட்காமல் எழிலை தன்னுடன் பேச வேண்டாம் என பாக்யா திட்டி அனுப்புகிறாள்.

இதற்கெல்லாம் காரணம் குடும்பத்துடன் வெளியில் செல்லும் போதெல்லாம் கோபி அவர்களுடன் வராமல் ராதிகாவுடன் கூத்தடிப்பதை பார்த்த எழில், அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், கோபியை தன்னுடைய படத்தை பார்க்க வரவேண்டாம் என சொல்லியிருப்பான்.

ஆனால் இந்த உண்மையை வீட்டில் இருப்பவர்களிடம் எப்படி சொல்லி புரிய வைக்க முடியும் என்று எழில் மிகவும் கலக்கம் அடைகிறான். அதுமட்டுமின்றி கோபியும் எழில், ராதிகாவின் பற்றி வீட்டில் இருப்பவர்களிடம் சொல்ல மாட்டான் என்ற தைரியத்தில், கோபியை அவமானப் படுத்திய எழிலுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு கீழ்த்தரமான வேலைகள் செய்து குடும்பத்தாரை எழிலுக்கு எதிராக திருப்பி விட்டிருக்கிறான்.

Trending News