திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பாலு மகேந்திரா கதையை சுட்ட விக்னேஷ் சிவன்.. கடும் கோபத்தில் விஜய் சேதுபதி

ரீமேக்காக இல்லாமல் ஒரு படத்தை தழுவி மற்றோரு படம் எடுப்பது சகஜம். ஆனால் பெரும்பாலான இயக்குனர் இதனை மறுத்துள்ளனர். ஆனால் சில படங்களில் நமக்கு மற்றோரு படத்தின் சாயல் சில சமயங்களில் அப்பட்டமாகவே வரும்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி,சமந்தா, நயன்தாரா நடித்துள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம். இந்த படத்தில் இருந்து வெளியான பாடல்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

அண்மையில் இந்த படத்தின் டீஸர் வெளியாகியது. அதிலிருந்து தான் விக்னேஷ் சிவனின் இந்த படம் அப்பட்டமான காப்பி என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

1987இல் பாலு மகேந்திரா இயக்கத்தில் மோகன், ராதிகா, அர்ச்சனா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ரெட்டை வால் குருவி. இந்த படம் அப்போது நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் இடம்பெறும் ராஜா ராஜா சோழன் பாடல் இன்றளவும் பிரபலம்.

இந்த படத்தில் நாயகன் இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் காதலிப்பார். இதனால் ஏற்படும் விளைவுகளை அடிப்படையாகக் கொண்டு அந்த படம் உருவானது. ஏற்கனவே இந்த படம் ஹாலிவுட்டில் வெளியான மிக்கி அண்டு மவுடே என்னும் படத்தின் காப்பி என விமர்சனங்கள் வந்தன.

இப்போது அந்த படத்தை மீண்டும் காப்பி அடித்து தமிழில் படமேடுத்துள்ளதாக நெட்டிசன்கள் விக்னேஷ் சிவனிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். இப்பொழுது ரசிகர்கள் ரெட்டைவால் குருவி படத்தின் காப்பி தான் விக்னேஷ் சிவன் எடுத்த காத்து வாக்கில் இரண்டு காதல் படம் என்று கலாய்த்து வருகின்றனர். இப்படி அனைவரும் கலாய்ப்பதை கண்டு இப்பமே படத்தை காப்பி என்று சொல்கிறார்களே ரசிகர்கள் என்று கடும் கோபத்தில் இருக்கிறாராம் விஜய்சேதுபதி

Trending News