புதன்கிழமை, ஜனவரி 8, 2025

ஒரு வருடத்திற்குலேயே அதிக படங்கள் நடித்த 5 நடிகைகள்.. நயன்தாராவை ஓரங்கட்டிய பிரபல நடிகை

கோலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகைகள் தொடர்ந்து பல படங்கள் நடித்து வருகிறார்கள். மேலும் முன்னணி நடிகர்களுக்கு கதாநாயகியாக நடித்து தனது அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்கிறார்கள். அவ்வாறு ஒரே வருடத்திற்குள் அதிக படங்களில் நடித்த 5 நடிகைகளை பார்க்கலாம்.

நயன்தாரா : கோலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதல் இடத்தைப் பிடித்தவர் நடிகை நயன்தாரா. இவர் 2019 இல் ஏழு படங்களில் நடித்து அசத்தியுள்ளார். அந்த ஆண்டு சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல், விஜயின் பிகில், விசுவாசம், கொலையுதிர் காலம், லேடி டைகர், லவ் ஆக்சன் ட்ராமா ஆகிய படங்கள் நயன்தாராவுக்கு வெளியானது.

கீர்த்தி சுரேஷ் : தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக உள்ளவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவருடைய நடிப்பில் கடந்த 2018ல் 7 படங்கள் வெளியானது. விஜயுடன் சர்கார், சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம், விக்ரமுடன் சாமி 2, சிவகார்த்திகேயனுடன் சீமராஜா, விஷாலுடன் சண்டக்கோழி 2, நடிகையர் திலகம், அக்ந்யதாவஸீ போன்ற படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.

பிரியாமணி : கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் படத்தில் முத்தழகு என்ற அழுத்தமான கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் பிரியாமணி. இவர் 2009ஆம் ஆண்டு 7 படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் துரோணா, மித்ருடு, ஆறுமுகம், புதிய முகம், நினைத்தாலே இனிக்கும், ராம், பிரவரக்யுடு ஆகிய படங்கள் வெளியானது.

சினேகா : ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் உச்ச நடிகையாக இருந்தவர் நடிகை சினேகா. இவர் 2002 மற்றும் 2008 கிட்டத்தட்ட 7 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவருடைய நடிப்பில் பிரிவோம் சந்திப்போம், இன்பா, பாண்டி, ஆதி விஷ்ணு, சிலம்பாட்டம், பாண்டுரங்கடு, நீ சுகமே நீ கொருக்குன்னா அகிய படங்கள் 2008 ல் வெளியானது.

தமன்னா : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் நடிகை தமன்னா. இவருக்கும் 2019ஆம் ஆண்டு 8 படங்கள் வெளியானது. கண்ணே கலைமானே, ஆக்ஷன், தேவி 2, ஃபன் அண்ட் பிரஸ்ட்ரேஷன், அபிநேத்ரி 2, காமோஷி, பெட்ரோமாக்ஸ், சை ரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்கள் தமன்னாவுக்கு 2019 இல் வெளியானது.

Trending News