விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றது. தற்போது இப்படம் சித்திரை பண்டிகையையொட்டி ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விஜய் ரசிகர்கள் மட்டுமன்றி அனைவரும் இப்படத்தை எதிர்பார்த்துக் காத்து கொண்டிருக்கின்றனர்.
இப்போதே படத்தை ஹிட்டாகும் விதத்தில் நிறைய விஷயங்களை செய்து வருகிறது படக்குழு. இப்படத்தின் பிரமோஷனுக்காக 10 வருடங்களுக்குப் பிறகு விஜய் சன் டிவியில் பேட்டி கொடுத்துள்ளார். மேலும் எப்படியாவது முதல் நாளிலேயே வசூலை அள்ளிக் குவிக்க வேண்டும் என்ற முனைப்பில் பீஸ்ட் படக்குழு செயல்பட்டு வருகிறது.
ஏற்கனவே அஜித் நடிப்பில் வெளியான வலிமை படம் ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது என புருடாவிட்டனர். அதெல்லாம் சுத்த பொய். வெறும் 700 தியேட்டர்களில் மட்டும் தான் வலிமை படம் வெளியாகி உள்ளது. ஆனால் பீஸ்ட் படத்திற்கு கிட்டத்தட்ட 800 தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
பீஸ்ட் படத்தின் ரிலீசுக்கு மறுநாள் ஏப்ரல் 14ஆம் தேதி யாஷ் நடிப்பில் கே ஜி எஃப் 2 படம் வெளியாகயுள்ளது. இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. இதனால் கே ஜி எஃப் 2 படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
ஆனால் விஜய்யின் பீஸ்ட் படத்தினால் கேஜிஎஃப் 2 படத்திற்கு வெறும் 250 தியேட்டர்கள் மட்டுமே ஒதுக்கி உள்ளனர். இதனை திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். விஜய் படங்கள் தொடர்ந்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி வருகிறது. சென்ற ஆண்டு வெளியான மாஸ்டர் படமும் வசூல் சாதனை படைத்தது.
இந்நிலையில் கேஜிஎஃப் படத்தினால் பீஸ்ட் படத்தின் வசூலை பாதிக்கும் என பலரும் கூறிவந்தனர். ஆனால் இதெல்லாம் தவிடுபொடியாக்கி விஜயின் பீஸ்ட் படம் முதல் நாள் கலெக்ஷனிலேயே வசூலை அள்ளிவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும், பீஸ்ட் படமும் பிளாக்பஸ்டர் என்பது இதன் மூலம் உறுதியாகிறது.