வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

அதிரடியாக களமிறங்கும் வெண்பாவின் அம்மா.. 150 படங்களுக்கு மேல் நடித்தும் இப்படி ஒரு நிலைமையா.?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா தொடரில் தற்போது வெண்பாவிற்கு போன் கால் ஒன்று அடிக்கடி வருகிறது. அது யாரும் என்பது தற்போது வரை மர்மமாக இருந்தது. ஆனால் அது வெண்பாவின் அம்மா என்பது தெரியவந்துள்ளது.

வெண்பாவிற்கும், அவரது அம்மாவிற்கும் ஏதோ ஒரு பிரச்சினை காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர். ஆனால் தற்போது பாரதிகண்ணம்மா தொடரில் வெண்பாவின் அம்மா என்ட்ரி அரங்கேறியுள்ளது. அது யார் என்றால் பலரையும் வியப்பில் ஆழ்த்தும். 80, 90களில் முன்னணி நடிகையாக இருந்த பிரபல நடிகை ரேகா தான்.

இவருக்கு பட வாய்ப்பு இல்லாததால் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார். இதில் கோமாளிகள் உடன் கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டதால் இவர் மீது ரசிகர்களுக்கு வெறுப்பு வர தொடங்கியது. அந்த எண்ணத்தை மாற்ற வேண்டும் என ரேகா பிக்பாஸில் கலந்து கொண்டார்.

ஆனால் சில வாரங்கள் மட்டுமே அவரால் அங்கு தாக்கு பிடிக்க முடிந்தது. இந்நிலையில் மீண்டும் விஜய் டிவி ரேகாவிற்கு வாய்ப்பை அளித்துள்ளது. தற்போது ரேகா பாரதிகண்ணம்மா தொடரில் வெண்பாவின் அம்மா ஷர்மிளாவாக அறிமுகமாகியுள்ளார்.

இவர் பாரதியின் மருத்துவமனைக்கு வந்து பல பத்திரிகைகளை காட்டி இதில் எது ஓகே என கேட்கிறார். யாருக்கு இது என பாரதி கேட்க உங்களுக்கு தான் கல்யாணம் என ஷர்மிளா கூறுகிறார். டாக்டர் வெண்பா உங்களுக்கு ஃபிரண்டா, மனைவியா, இல்லை அதற்கும் மேலா என ஷர்மிளாவின் கேள்வியால் அதிர்ச்சி அடைகிறார் பாரதி.

பாரதிகண்ணம்மா தொடரில் ரேகா வில்லியாக களமிறங்க உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் ரேகாவின் வருகையால் பாரதிகண்ணம்மா தொடரில் பல திருப்பங்கள் வரக் காத்திருக்கிறது. ரேகாவுக்கு பட வாய்ப்பு கிடைக்காததால் விஜய் டிவி அவரை பக்காவாக பயன்படுத்திக் கொண்டுள்ளது.

Trending News