வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

அதிர்ஷ்டமில்லாததை நிரூபித்த அருண்விஜய்.. இரட்டை ஆயுள் தண்டனையால் பாதித்த யானை படம்

தமிழ் சினிமாவில் சுமார் 25 வருடங்களுக்கு மேல் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அருண் விஜய்யின் படம் ஒன்று ரிலீஸ் ஆகும் முன்பே வியாபாரம் ஆனது இதுவே முதல் முறை. அப்படிப்பட்ட படம்தான் அருண் விஜய்யின் 33 ஆவது திரைப்படமான யானை.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. எனவே யானை படம் வரும் மே 6ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதால், அந்த படத்திற்காக வரிசையாக அவர் நடித்து முடித்து வைத்திருக்கும் படங்கள் ரிலீஸ் செய்யாமல் காத்துக் கிடைக்கிறது.

ஆனால் இப்பொழுது யானை படம் ரிலீசாகுமா என்பதில் பெரிய சந்தேகம் நிலவி வருகிறது. அந்த படக் குழுவில் முக்கியமான பொறுப்பில் இருந்த ஒருவர் போலீசில் மாட்டி அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். யானை படத்தின் புரோடக்சன் கம்பெனியில் முக்கியமான ஒரு பொறுப்பில் இருக்கும் ஒருவர் கொலை கேசில் போலீசிடம் மாட்டிக் கொண்டுள்ளார்.

அந்த தீர்ப்பு இப்பொழுது வந்துவிட்டது. அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்து விட்டனர். அதனால் படக்குழு அந்த விஷயத்தில் மும்முரமாக இறங்கி வேலைகளை பார்த்து வருகிறது.

அருண் விஜய்யின் தங்கை கணவரான இயக்குனர் ஹரி இயக்கும் யானை படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா சங்கர் நடித்துள்ளார். எனவே கிராமத்து கதையம்சம் கலந்த ஆக்ஷன் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், சமுத்திரக்கனி, யோகி பாபு, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்.

இதனால் யானை படம் வெளியாவதில் பெரும் சிக்கல் நிலவி வருகிறது. ஆனால் யானை படம் தனக்கு நல்ல பெயரை வாங்கித் தரும். அதனால் அதை வைத்து அடுத்த படத்தை ஓரளவு ஹிட் படங்களாக ஆக முடியும் என்ற ஆசையில் அருண் விஜய் இருந்து கொண்டிருக்கிறார்.

Trending News