புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

சூர்யாவுடன் இணையும் சுதா கொங்கரா.. ஆனா படம் வேறமாரி

சுதா கொங்கரா, சூர்யா கூட்டணியில் 2020 ஆம் ஆண்டு அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான படம் சூரரைப் போற்று. ஒடிடியில் வெளியானாலும் இப்படத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்தது. இப்படம் சிம்ப்ளிஃப்லி டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது.

அதன் பிறகு சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படம் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை. இந்நிலையில் பாலா இயக்கத்தில் சூர்யா மீண்டும் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் சூர்யா மீண்டும் சூரரைப்போற்று படத்தை போல ஒரு வெற்றிப்படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் சுதா கொங்குரா உடன் அடுத்த படத்தில் இணைய உள்ளார். தொடர்ந்து வாழ்க்கை வரலாறு படங்களில் நடித்து வரும் சூர்யா, இப்படத்தில் சமுதாய பிரச்சனையை வெளிக்கொண்டு வரும் வகையில் கதையை ரெடி பண்ண சொல்லி இருக்கிறார்.

இதை உறுதி செய்த சுதா கொங்கரா இது ஒருவரின் வாழ்க்கை வரலாறு படமாக இருக்காது, ஆனால் உண்மை சம்பத்தின் தழுவலாக தான் இருக்கும் என கூறியுள்ளார். இதனால் இப்படம் அன்றாட வாழ்வில் பார்க்கக்கூடிய அல்லது செய்தித்தாள்களில் படிக்கக் கூடிய ஒரு சமூகப் பிரச்சனையை கையில் எடுக்க உள்ளார் சுதா கொங்குரா.

மேலும், இப்படம் எப்போது தொடங்கும் என்ற ஆர்வத்தில் உள்ளதாக இயக்குனர் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார். மேலும் சூரரைப்போற்று படத்தை இசையமைத்த ஜிவி பிரகாஷ் இப்படத்திலும் இசையமைக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

மிகப் விரைவில் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் வாடிவாசல் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்த கையோடு சுதா கொங்கரா படத்தில் சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News