ஹரியவே கியூவில் நிக்கவிட்ட முன்னணி ஹீரோக்கள்.. மனம் நொந்து பொட்டியை கட்டிய பரிதாபம்

தமிழ் சினிமாவின் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஹரி. இவர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இதைதொடர்ந்து இப்படத்தின் இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்களையும் இயக்கி அதிலும் வெற்றிகண்டார் ஹரி.

தற்போது ஹரி முதன்முறையாக அருண் விஜய்யை வைத்து யானை படத்தை எடுத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் மே மாதம் ரிலீஸாகும் என கூறப்பட்டது. யானை படம் ரிலீஸ் ஆவதில் நிறைய சிக்கல்கள் உள்ளதாம். அதாவது இப்படத்தின் புரோடக்சன் மேனேஜர் ஏதோ பிரச்சனையில் மாட்டிக் கொண்டுள்ளார்.

இந்த விஷயம் தற்போது போலீஸ் கேஸ் ஆகியதால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இயக்குனர் ஹரி தன்னுடைய அடுத்த படத்திற்கான கதையை தயார் செய்துவிட்டு ஹீரோக்களை நாடியுள்ளார்.

ஆனால் முன்பு போல தற்போது முன்னணி ஹீரோக்களை அவ்வளவு எளிதில் பார்க்க முடிவதில்லை. ஆனால் அது புது இயக்குனர்களுக்கு கூட பொருந்தும். ஆனால் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனர் வரிசையில் இருக்கும் ஹரியை பார்க்க பல டாப் நடிகர்களும் மறுத்துள்ளனர்.

இதனால் ஹரி தனது ரூட்டை மாற்றிக் கொண்டுள்ளார். அதாவது, தெலுங்கில் படம் பண்ணலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார். தற்போது வெங்கட்பிரபுவும் நாக சைதன்யாவை வைத்து தெலுங்கு படத்தை இயக்கயுள்ளார். அதேபோல் தெலுங்கு நடிகர் கோபிசந்த்தை வைத்து ஹரி இப்பொழுது ஒரு படத்தை இயக்க இருக்கிறார்.

கோபிசந்த் ஜெயம் படத்தில் ரவிக்கு வில்லனாக ரகு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது உள்ள முன்னணி நடிகர்கள் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதால் இதுபோன்ற பிரபல இயக்குனர்கள் மற்ற மொழி படங்களை இயக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள்.