விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வெளிவருவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தை பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. அதில் தற்போது வெளிவந்த ஒரு தகவல் விஜய் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
அதாவது விஜய் பீஸ்ட் பட குழுவினருடன் காரில் செல்லும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் விஜய், டான்ஸ் மாஸ்டர் சதீஷ்குமார், படத்தின் இயக்குனர் நெல்சன், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் காரில் செல்கின்றனர்.
தன்னுடைய சொந்த காரை விஜய் ஓட்ட அவருடன் படக்குழுவினர் அனைவரும் கலகலப்பாக பேசியபடி ஜாலியாக ஒரு பயணம் செல்கின்றனர். இந்த வீடியோவை இந்த திரைப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்துள்ள அபர்ணா தாஸ் தன்னுடைய சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். அதுமட்டுமின்றி தான் பிறந்த பலனை அடைந்து விட்டதாகவும் உற்சாக மிகுதியில் துள்ளி குதித்து வருகிறாராம்
மேலும் அவர் என்னுடைய இந்த வருட பிறந்த நாளை என்னால் எப்போதும் மறக்க முடியாது. தளபதி விஜய் உடன் காரில் சென்றது என்னுடைய பிறந்தநாளுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு என்று அவர் தன்னுடைய மகிழ்ச்சியை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

இது அபர்ணாவுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்துள்ளது. பொதுவாகவே விஜய் எப்போதும் அமைதியாக தான் இருப்பார். ஆனால் இந்த பீஸ்ட் படக்குழுவினருடன் அவர் இவ்வளவு ஜாலியாகவும், கலகலப்பாகவும் இருப்பது அவருடைய ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
மேலும் இந்த வீடியோவை அவர்கள் சோஷியல் மீடியாவில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். இதேபோன்று விஜய், நெல்சன் இருவரும் பங்குபெற்ற நேருக்கு நேர் நிகழ்ச்சியில் அவர்கள் இருவரும் மிகவும் ஜாலியாகவும், சுவாரசியமாகவும் பேசியது குறிப்பிடத்தக்கது.