தயாரிப்பு நிறுவனத்தால் செம கடுப்பில் இருக்கும் நடிகர்.. அதிரடி முடிவால் நிலைகுலைந்து போன நிர்வாகம்

தற்போது திரையுலகினர் அனைவரும் அந்த மாஸ் நடிகரின் திரைப்படத்தை தான் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சமீபகாலமாகவே நடிகர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் வசூலில் மாஸ் காட்டி வருகிறது.

அந்த வகையில் தற்போது உருவாகியிருக்கும் இந்த திரைப்படமும் ரசிகர்களிடையே ஒரு ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. இதனால் இந்த திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பும் என்பதில் சந்தேகமே இல்லை. இருந்தாலும் நடிகர் தயாரிப்பு நிறுவனத்தின் போக்கால் தற்போது கடும் அப்செட்டில் இருக்கிறார்.

வழக்கமாக நடிகர் தன்னுடைய திரைப்பட விழாவின் போது பேசும் பேச்சு ஒரு அதிர்வை ஏற்படுத்தும். சமீபகாலமாக நடிகர் பட விழாவின்போது சமூகம் சார்ந்த பல விஷயங்களைப் பற்றியும் நாசூக்காக கூறி வருகின்றார். இதனால் அவரின் பேச்சுக்கு ரசிகர்கள் அடிமையாக இருக்கின்றனர்.

ஆனால் நடிகர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் இந்த படத்திற்கு எந்த விழாவும் நடக்கக்கூடாது என்று தயாரிப்பு நிறுவனம் தடை போட்டு விட்டது. இதற்கு மேலிடத்து உத்தரவு தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இதனால் நடிகர் உட்பட ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இருந்தாலும் நடிகர் இந்த முடிவுக்கு அமைதியாகவே இருந்துள்ளார். இதற்கு காரணம் தயாரிப்பு நிறுவனத்தின் முக்கிய புள்ளி நடிகரை சந்தித்து தங்களின் நிலைமையை விளக்கி கூறியதுதானாம். அதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் இயக்குனர் மீண்டும் இந்த நிறுவனத்துக்கு உச்ச நடிகரை வைத்து படத்தை இயக்க இருக்கிறார்.

இதற்கு ஒரு வகையில் நடிகர் தான் முக்கிய காரணம். தன்னால் இயக்குனருக்கு எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது என்பதற்காகவும் நடிகர் தற்போது அமைதியாகவே இருக்க முடிவு செய்துள்ளார். இருப்பினும் இனி தயாரிப்பு நிறுவனத்திற்கு கால்ஷீட் கொடுக்க கூடாது என்ற முடிவிலும் நடிகர் உறுதியாக இருக்கிறார்.

அவரின் இந்த முடிவு தற்போது தயாரிப்பு நிறுவனத்தை நிலைகுலைய செய்துள்ளது. மேலிடத்தின் கடும் நெருக்கடியால் நடிகர் உடனான சுமுகமான உறவு தற்போது தயாரிப்பு நிறுவனத்திற்கு பறிபோயுள்ளது. மேலும் எந்த பிரமோஷனும் இல்லாவிட்டாலும் நடிகரின் திரைப்படம் ரசிகர்களின் ஆதரவுடன் மாஸ் காட்டும் என்று திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.