சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

1400 வருட பழமையான கோவிலை பராமரிக்கும் பிக் பாஸ் பிரபலம்.. பெரிய மனுஷனா இப்படி இருக்கணும்

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான அந்த நடிகர், தற்போது ஆன்மீகத்தில் இறங்கியுள்ளாராம். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் படவாய்ப்பு இல்லாவிட்டாலும் இது போன்ற ஆன்மீக விஷயத்தில் கவனம் செலுத்தி வருவதால் தற்போது பட வாய்ப்பு வருகிறதாம்.

நடிகர்கள் விளம்பரத்துக்காக ஆன்மீகத்தை பயன்படுத்தும் நடிகர்கள் நடிகைகள் இருக்கும் இந்த காலகட்டத்தில் நடிகர் பரணி 1400 வருட பழமையான சிவன் கோவில் புணர் அமைத்துள்ளார். நடிகர் பரணி தமிழ் சினிமாவில் கல்லூரி என்ற திரைப்படத்தின் வாயிலாக  நுழைந்தார்.

பரணி முதல் படம் அமைந்த பிறகு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் பெரிதாக இல்லை பின்னர் நாடோடிகள் என்ற படத்தில் நடித்ததன் காரணமாக அனைவரும் அறியப்பட்ட முகமாக அறிந்தார். பின்னர் சிறு சிறு வேடங்களில் பல படங்களில் தோன்றி மறைந்தார். சிறிய இடைவேளைக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல சர்ச்சைகளில் ஈடுபட்டார். பின்னர் ஒரு சில படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். மக்களை மறந்த நேரத்தில் திடீரென்று இவரைப் பற்றி ஒரு முக்கிய செய்தி அதாவது திருவள்ளூர் மாவட்டத்தில் மிகவும் பாழடைந்த 1400 வருட பழமையான முக்கியமான சிவன் கோயில்.

இந்தக் கோயில் எதேச்சையாக இவர் கண்ணில் பட சிறு முயற்சிகளில் ஈடுபட்டு ஊர் மக்களின் உதவியோடு கோயிலை புணர் அமைத்தார். இவரால் முடிந்த அளவுக்கு பண உதவிகளை அளித்து அனைவரிடமும் உதவி கேட்டு கோவிலின் நல்ல நிலைக்கு கொண்டு வந்துள்ளார். இது அனைவருக்கும் அனைத்து நடிகர்களுக்கும் மிக ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

அரசாங்க உதவிகளையும் அறநிலையப் உதவிகளையும் கேட்டு கோயிலுக்கு இன்னும் பல உதவிகளை செய்து வருகிறார். இப்போது அந்த கோயில் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு திருவிழாக்கள் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் பல கோவில்களை இதே மாதிரி புனரமைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

இவர் ஒரு சிவனடியார் என்று சொல்ல முடியாது சிவனடியார் மாதிரி. இப்பொழுது இவர் பல படங்களில் நேரமின்றி நடித்துக்கொண்டிருக்கிறார். அந்த ஊர் மக்களால் பாராட்டப்பட்டு இப்பொழுது அனைவராலும் அறியப்படுகிறார்.

Trending News