சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

சின்னத்திரையிலும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்றாங்க.. கடைக்குட்டி சிங்கம் பட நடிகைக்கு நடந்த கொடுமை

பெண் நடிகைகளுக்கு சினிமாவில் ஏற்படும் சங்கடைங்களுக்கு எப்படியான எதிர்ப்புகள் எழுந்தாலும் அவை அடங்கிய பாடில்லை. இதனாலேயே நிறைய திறமையுள்ள நடிகைகள் சினிமாவை விட்டு ஒதுங்கி போய்விடுகிறார்கள்.

கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்தியின் ஐந்து அக்காவில் நான்காவது அக்காவாக நடித்திருந்தவர் நடிகை ஜீவிதா. ஆண் தேவதை படத்தில் சமுத்திரக்கனிக்கு வில்லியாகவும் நடித்திருந்தார். ஆபிஸ், பார்த்த ஞாபகம் இல்லையோ, தேவதை, வைராக்கியம், போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணமாம் கல்யாணம் தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிட்சயப்பட்டார்.

பெரும்பாலும் துணை நடிகையாகவே வலம் வரும் இவர் என்று தனியும் என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இவர் கூறுகையில், முதலில் ஏ.வி.எம்மின் மனதில் உறுதி வேண்டும் சீரியலில் அறிமுகமானேன், பின்னர் நிறைய பட வாய்ப்புகள் வர தொடங்கின. பல்வேறு படங்களில் பணிப்புரியும் மேனேஜர் என்னை தொடர்ப்பு கொண்டனர்.

இருப்பினும் நான் சினிமாவில் நடிக்காததற்கு காரணம் அவ்வாறாக தொடர்ப்பு கொண்ட மேனேஜர்ளே. அணுகும் போதே, நீங்கள் இதற்கு கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும் என கூறினார்கள். முதல் முறை அணுகும் வெளிப்படையாக அட்ஜஸ்ட் செய்துக்கொண்டால், நல்ல படத்தில் வாய்ப்பு கிட்டும், நிறைய சம்பளமும் வழங்கப்படும் என்றே அணுகினர். மனதில் தைரியம் இருந்ததால் முகத்திற்கு நேராகவே முடியாது என மறுத்து விட்டேன்.

இதனால் பட வாய்ப்புகள் கைவிட்டு போயின. ஆனால் எனக்கு, நான் நடிக்கும் சீரியல்களே நல்ல திருப்தியினை அளிக்கிறது. இங்கேயும் இவ்வாறான சில அட்ஜஸ்மென்டுகள் இருக்க தான் செய்கிறது. ஆனால் சின்னத்திரையில் நான் அதை எதிர்க்கொள்ளவில்லை என கூறியுள்ளார். என்னுடைய இடத்தில் வேறு யாரும் இருந்திருந்தால் இந்த துறையே வேண்டாமேன முடிவெடுத்து ஒதுங்கியிருப்பார்கள் எனவும் கூறினார்.

நடிகை ஜீவிதா தற்போது யானை, கொடை போன்ற படங்களில் நடித்து வருகிறார். மீ டூ போன்ற நிகழ்வுகள் வெளிவந்த சினிமாவில் நடத்தப்படும் இவ்வாறான அட்ஜஸ்மென்ட் சம்பவங்கள் வெளி உலகிற்கு அப்பட்டமாக காட்டினாலும் சினிமாவில் இருந்து இது போன்ற செயல்கள் குறைந்தப்பாடில்லை.

Trending News