தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத மிக முக்கியமான அதிக ரசிகர்களை கொண்ட நடிகராக தளபதி விஜய் அவர்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும்படி இவர் இன்று பல வெற்றிப் படங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர் என்ற பெயரை தக்க வைத்துக் கொள்கிறார்.
இவர் நடிக்கும் அனைத்து படங்களும் வசூல் ரீதியாக அனைவருக்கும் லாபம் தரும் படமாக இருப்பதால் இவரது படம் எப்பொழுது வரும் என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். விஜய் கால்ஷீட் தருவாரா என்ற எண்ணத்தில் பல தயாரிப்பாளர்களும் பல இயக்குனர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் ரசிகர்களை கொண்டு பல வசூல் சாதனைகளை செய்து வருகிறார். வெளிநாடுகளிலும் இப்போது இவரது படங்கள் வசூல் செய்ய ஆரம்பித்திருக்கிறது.
இது எல்லாம் தெரிந்த விஷயம் தான் இப்பொழுது விஜய் என்ற பெயரில் வசூல் வசூல் வசூல் என்று சொல்லும் அளவிற்கு வசூல் சாதனை படைத்து வருகிறார். இவரது ஆரம்ப காலத்தில் இவர் படங்கள் பெரிதாக வெற்றி பெறாது. விஜயின் அப்பா சந்திரசேகர் மனம் தளராமல் இவரை வெற்றி அடைய அடுக்கடுக்காக பல தோல்வி படங்களை கொடுத்து கொண்டிருந்தார்.
பல படங்கள் சொல்லலாம் அதற்கு எடுத்துக்காட்டாக அதன் விளைவாக பெரும் நஷ்டத்தை அடைந்து கடன் பெற்றவர்களாக மாறிவிட்டனர். அப்பொழுது எஸ் ஏ சந்திரசேகர் அவன் வாங்கிய கடனை அடைக்க சென்னையில் உள்ள அவரது வீட்டை விற்க முயன்றார். எப்படியாவது கடனை அடைக்க வேண்டும் என்ற முயற்சியில் கடைசியில் ஒரு படம் எடுக்கலாம் அதில் வரும் லாபத்தை வைத்து கடனை அடைக்க முயற்சி எடுக்கலாம் என்று முடிவு செய்தார்.
அப்படி உருவான படம்தான் செந்தூரப்பாண்டி இந்த படம் வெற்றியடைய விஜயகாந்திடம் நடிக்க சம்மதம் வாங்கினார். கேப்டன் அவர்கள் சம்பளம் இல்லாமல் நடித்துக் கொடுத்த திரைப்படம். அந்த படம் வெற்றியடைந்து கடனையும் அடைத்தார்.
இன்று தமிழகமே போற்றும் அளவிற்கு அரசியலில் முதல்வராகும் வேண்டுமென்ற எண்ணம் வரும் அளவிற்கு ரசிகர்களை கொண்டுள்ள விஜய் வளர்ச்சி அன்று விஜயகாந்த் என்ற நல்ல மனிதரால் விஜய் வளர்ந்துள்ளார். இதனை விஜய் அவரது ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.