படுக்கையறை காட்சி, கேடுகெட்ட வேலையை பார்த்த மாயன்.. விஜய் டிவி சீரியலில் நடந்த கூத்து

விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில், சீரியல் நடிகர் மிர்ச்சி செந்தில் கதாநாயகனாக மாறன், மாயன் என்ற இரட்டை வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதில் மாயன் தன்னுடைய மாமன் மகள் மகாவை காதலித்து திருட்டுத்தனமாக திருமணம் செய்து கொண்டான். கொஞ்சநாள் கோபமாக இருந்த மகா, தற்போது மாயனை மனதார ஏற்றுக்கொண்டாள்.

மேலும் மாயன் உடைய தம்பி மாறன், அப்பாவின் இரண்டாவது மனைவியையும் அவர்களுடைய பிள்ளைகளையும் வெறுத்து ஒதுக்கும் நிலையில், மாயன் தான் அவர்களுக்கு பக்கபலமாக நிற்கிறான். இதனாலே சொந்த அம்மாவை கூட வெறுத்து ஒதுக்கும் மாயனை, பழிவாங்க வேண்டும் என மாறன் வில்லத்தனமாக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் இந்நிலையில், புதிதாக அத்தை மகள் ஒருத்தி வீட்டிற்கு வர, அவள் மாறனை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறாள்.

அவள் கிராமத்து பெண்ணாக எதார்த்தமாக இருப்பதால், அவளை மாறன் நிமிர்ந்துகூட பார்க்கவில்லை. ஆனால் மாறனை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென ஒற்றைக்காலில் நிற்கும் அத்தை மகளுக்கு மாயன் வில்லத்தனமான பிளான் ஒன்றை போட்டு அதை செயல்ப்படுத்துகிறான்.

மாறன் நேற்று இரவு குடித்துவிட்டு வீட்டிற்கு வர, அவனை அத்தை மகள் படுக்கை அறைக்கு அழைத்துச் சென்று படுக்க வைத்துவிட்டு பின்பு அவனுடனே சேர்ந்து உறங்கிவிட சொல்கிறான். இதெல்லாம் தப்பு என நினைத்தால் மனசாட்சியை கழட்டி வைத்துவிடு எனவும் அவளுக்கு மாயம் செய்கிறான்.

அதன் பிறகு வீட்டில் இருப்பவர்களே உங்கள் இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்து விடுவார்கள் என அத்தை மகளுக்கு மாயன் திட்டம் தீட்டி அதை செயல்படுத்தவும் செய்கிறான். இதன்பிறகு மாறன் அத்தை மகளையே திருமணம் செய்து கொண்டு மாயனை பழிவாங்கும் எண்ணத்தை விட்டுவிட்டு திருமண வாழ்க்கையை வாழ துவங்கப் போகிறான்.

இவ்வளவு நாள் மாறன் வில்லனாக இருந்ததினால் மட்டுமே அந்தக் கேரக்டர் பெரிதாகப்பேசப்பட்டது. இதன்பிறகு மாறன் டம்மியாக மாறி மாயனே இந்த சீரியலை நகர்த்தும் கதாபாத்திரமாக இருக்கப்போகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →