ஒரே ஒரு மாவட்டத்தில் மட்டும் தடைசெய்யப்பட்ட பீஸ்ட்.. என்ன காரணம் தெரியுமா.?

உலகெங்கும் தளபதி ரசிகர்கள் இன்று ரிலீஸ் ஆன பீஸ்ட் திரைப்படத்திற்காக பட்டாசு வெடித்தும், பாலாபிஷேகம் செய்து திரையரங்குகளை விழாக்கோலம் போல் களைகட்ட வைத்திருக்கின்றனர். இந்தப் படத்தின் முதல் ஷோவை பார்க்க வேண்டும் என்றே அதிகாலை 4 மணி முதல் ரசிகர்கள் திரையரங்கில் காத்திருந்து கண்டுகளித்தனர்.

எனவே சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் தளபதி ரசிகர்களை கொண்டாட வைத்த பீஸ்ட் திரைப்படம், ஒரே ஒரு மாவட்டத்தில் மட்டும் திரையிட முடியாது என்று, அந்த மாவட்டத்தில் மட்டும் பீஸ்ட் திரைப்படம் திரையரங்கில் ரிலீஸ் செய்யப்படாததால் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

ஏனென்றால் விநியோகஸ்தர்கள் கொடுத்துள்ள ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லாத காரணத்தால் பீஸ்ட் திரைப்படத்தை வெளியிடுவது தொடர்பாக இன்னும் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லையென திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன் காரணமாகவே  கரூர் மாவட்டத்தில் மட்டும் பீஸ்ட் திரைப்படம் வெளியாகவில்லையென்றும், உள்மாவட்டங்களில் இரண்டு திரையரங்கில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகவுள்ளதாக விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

விநியோகஸ்தர்கள் நிர்ணயித்த விலை ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை என தியேட்டர் உரிமையாளர்கள் கரூரில் பீஸ்ட் படத்தை ரிலீஸ் செய்யவில்லை. இவ்வாறு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் வினியோகஸ்தர்கள் சங்கம் இருவருக்கும் இடையே நடக்கும் பிரச்சனைக்கு இன்று இரவு சுமுக முடிவு எட்டி விடும்.

ஆகையால் இந்த இரு தரப்பிற்கும் இடையே தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. அதன் பிறகு நாளை பீஸ்ட் திரைப்படம் கரூரில் ரிலீஸ் செய்யப்படும் என்றும் ரசிகர்களால் நம்பப்படுகிறது.