விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் கணவனை இழந்த அமிர்தாவிற்கு தொடக்கத்தில் நண்பனாக பழகி வந்த எழில், அதன் பிறகு அமிர்தாவிடம் தன்னுடைய காதலை தெரிவித்தான். இருப்பினும் அந்த சமயத்தில் எழிலின் காதலை ஏற்காத அமிர்தா, அதன் பிறகு எழிலின் நல்லகுணம் தெரியவர அவனை கொஞ்சம் கொஞ்சமாக தற்போது காதலிக்க தொடங்கி விட்டாள்.
இந்த சமயத்தில் இயக்குனராக புதிய படத்தில் கமிட் ஆகியிருக்கும் எழிலுக்கு, உதவி இயக்குனராக கல்லூரி தோழி ஜானு ஒருவர் பாக்கியலட்சுமி சீரியலில் என்ட்ரி கொடுத்திருக்கிறார், ஜானு எழிலுடன் சகஜமாக பழகுவதும் அவனுடன் அருகில் அமர்ந்தபடி கைகோர்த்து ஒட்டி உரசி உட்காரவும் அமிர்தாவால் பார்க்கமுடியவில்லை.
இதனால் அடிக்கடி அமிர்தா அவர்கள் இருக்கும் இடத்தை விட்டு விலகி செல்கிறாள். இதனைப் புரிந்து கொண்ட எழில், அமிர்தாவிற்கு தன் மீது காதல் ஏற்பட்டு இருக்கிறதோ என்ற சந்தேகத்தில் அதை அமிர்தாவிடமும் இனிவரும் நாட்களில் கேட்க போகிறான்.
ஆனால் அதற்குள் ஜானு-எழில் இருவரும் நெருங்கி பழகுவதை பார்க்கும் அமிர்தா, ஜானு தான் எழிலுக்கு நல்ல ஜோடியாக இருக்கமுடியும் என்ற எண்ணத்தில் தன்னுடைய காதலை தெரிவிக்காமல் இருந்து விடவும் வாய்ப்பிருக்கிறது.
ஆனால் எழில், அமிர்தாவை அப்படி செய்ய விடமாட்டான். ஏனென்றால் அமிர்தா எழிலின் காதலை ஏற்காத போதே அமிர்தாவையும், அமிர்தா குழந்தை மற்றும் குடும்பத்தை விட்டு விலகாமல் அவர்களை பொறுப்போடு பார்த்து கொண்டவன்.
அப்படி இருக்கையில் எழில் நிச்சயம் தன்னுடைய குடும்பத்தாரின் சம்மதத்துடன் விரைவில் அமிர்தாவை திருமணம் செய்து கொள்ள தான் போகிறான். இதற்கு ஜானு கதாபாத்திரமும் உதவியாக இருக்கப்போகிறது.