செவ்வாய்க்கிழமை, நவம்பர் 19, 2024

கே ஜி எஃப் 2 வில் தேவையில்லாத 2 கதாபாத்திரங்கள்.. இவங்க இல்லாம இருந்தா இன்னும் சூப்பரா இருக்கும்

யாஷ் நடிப்பில், இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், உருவான கேஜிஎப் 2 திரைப்படம் திரையரங்குகளில் கோலாகல வெற்றியுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இத்திரைப்படத்தைப் பார்த்த அனைத்து ரசிகர்களும், விமர்சகர்களும் படம் வேற லெவல் என மிஞ்சுகின்றனர். மேலும் இத்திரைப்படத்தில் தோன்றிய அனைத்து கதாபாத்திரங்களும் தங்களுடைய நடிப்புத் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் ஒரு சில கதாபாத்திரங்கள் கே ஜி எஃப் 2 திரைப்படத்தில் தவிர்த்திருக்கலாம் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

2018 ஆம் ஆண்டு தமிழ், தெலுங்கு,கன்னடம்,இந்தி உள்ளிட்ட மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியான கேஜிஎப் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது. அதுவரை கன்னட நடிகராக இருந்த யாஷ் கேஜிஎஃப் திரைப்படத்தின் மூலமாக இந்திய அளவில் மிகப் பெரிய நடிகராக உருவெடுத்தார். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இரண்டு வருடங்கள் கர்நாடகாவில் படமாக்கப்பட்டது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான கே ஜி எஃப் 2 திரைப்படத்தில் நடிகர் யாஷின் மாஸான ஆக்சன் காட்சிகளும், டயலாக்குகளும் இத்திரைப்படத்தின் வெற்றிக்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. அதேபோல வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சஞ்சய் தத் தன் கதாபாத்திரத்தை தத்ரூபமாக நடித்துள்ளார்.

மேலும் கே ஜி எஃப் 2 திரைப்படத்தில் இடம்பெற்ற பல முக்கிய கதாபாத்திரங்களான சஞ்சய் தத், ரவினா, ஸ்ரீநிதி ஷெட்டி, அர்ச்சனா ஜாய்ஸ் உள்ளிட்டோர் மாஸ் காட்டிய நிலையில் சில கதாபாத்திரங்கள் தேவையில்லாமல் இத்திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதிலும் முக்கியமாக நடிகர் பிரகாஷ்ராஜின் கதாபாத்திரம் அவ்வளவாக ரசிகர்களை கவரவில்லை. கேஜிஎஃப் திரைப்படத்தில் கதை சொல்லும் கதாபாத்திரத்திற்கு நடிகர் அனந்த் நாக் உட்கார்ந்த இடத்திலேயே நடித்து தெறிக்கவிட்டிருப்பார்.

தமிழில் நிழல்கள் ரவியின் டப்பிங் குரல் இவருக்கு கட்சிதமாக பொருந்தியிருக்கும். அவரது குரலே கே ஜி எஃப் படத்தின் முழு கதையையும் எடுத்துக் கொண்டு போகும். ஆனால் கே ஜி எஃப் 2 திரைப்படத்தில் அனந்த் நாக் கதாபாத்திரத்திற்கு பதிலாக பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார். பிரகாஷ்ராஜின் குரல் அந்த அளவுக்கு ரசிக்கும்படியாக இல்லை என்பதால் நிழல்கள் ரவியின் குரல் மற்றும் அனந்த் நாக் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி ஜான் கொக்கேன் கதாபாத்திரமும் எதற்கு இந்த கதாபாத்திரம் என்று கேட்கும் அளவிற்கு கேஜிஎப் 2 திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஜான் கொக்கேன்விற்கும் பெரிய அளவில் படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என பலரும் கூறி வருகின்றனர்.

இதனிடையே கேஜிஎப் 2 திரைப்படம் இந்திய தரத்தில் உருவாகி உள்ளது என்று ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். தமிழில் மட்டுமில்லாமல் பல மாநிலங்களிலும் இத்திரைப்படம் பிரம்மாண்டமான வரவேற்பை பெற்று வருகிறது. மீண்டும் யாஷ் மற்றும் இயக்குனர் பிரசாந்த் நீல் தங்களுடைய வெயிட்டேஜை இத்திரைப்படத்தில் காண்பித்துள்ளனர் என்பதே உண்மை.

- Advertisement -spot_img

Trending News