சினிமாவில் ஹீரோயின்கள் பெரும்பாலும் படத்தின் கதாநாயகியாகவே நடிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் நடித்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், குழந்தைகளுக்கு அம்மாவாகவும் தங்கையாகவும் ஸ்டுடென்ட் ஆகவும் எந்த கதாபாத்திரம் கிடைத்தாலும் நடித்தவர்தான் இந்த நடிகை.
அதன்மூலமே கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதேபோன்றுதான் முன்னணி நடிகர் ஒருவரும் இந்த நடிகையை போலவே படத்தில் எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் நடித்து விடுவேன் என்று நடிக்கும் பழக்கமுடையவர்.
அதனாலேயே வருடத்திற்கு ஏகப்பட்ட படங்களை நடித்து நாள் முழுவதும் பிஸியாகவே இருந்து கொண்டிருக்கிறார். தற்போது இந்த நடிகையால் முன்னணி நடிகருக்கு பெரும் தலைவலி ஏற்பட்டு இருக்கிறதாம்.
இவர்கள் இருவரும் சுமார் 5 படங்களுக்கு மேல் இணைந்து நடித்து விட்டாலும் முன்னணி நடிகர் கமிட்டாகும் அடுத்தடுத்த படங்களில் தன்னை நடிக்க வைக்க வேண்டும் என அந்த நடிகை சிபாரிசு செய்ய வலியுறுத்துகிறாராம்.
இதனால் அந்த முன்னணி நடிகரும் தற்போது வரிசையாக படங்களில் கமிட்டாகி வருவதால், படக்குழுவினரிடம் இதைப்பற்றி பேசுகிறாராம் ஆனால் படக்குழுவும் அந்த நடிகையுடன் நீங்கள் நடித்ததைப் பார்த்த ரசிகர்களுக்கு போரடித்திருக்கும். ஆகையால் அவர்கள் வேண்டவே வேண்டாம் என கும்பிடு போடுகின்றனராம்.
இருப்பினும் அந்த நடிகைக்கு என்ன பதில் சொல்வது என முன்னணி நடிகர் தர்மசங்கடமான நிலையை சந்தித்து கொண்டிருக்கிறாராம். இப்படி சிபாரிசு செய்த சொல்லியே வற்புறுத்தும் அந்த நடிகையை வெறுத்து விட்டதாக முன்னணி நடிகர் புலம்பிக் கொண்டிருக்கிறார்