ரஜினியை ஓரங்கட்டிய யஷ்.. இந்த சாதனையை யாரும் எதிர்பார்க்கல

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்கள் எல்லா மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெறும். மேலும் அவருடைய படங்கள் வசூல் சாதனை படைத்த பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும். இந்நிலையில் கடந்த ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த பெரிய வரவேற்பு பெறவில்லை. ஆனாலும் வசூலில் நல்ல லாபம் கிடைத்ததாக கூறப்படுகிறது.

இதனால் தற்போது ரஜினிகாந்த் நல்ல கதையைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் ரஜினி தனது 169 ஆவது படத்தில் நடிக்க உள்ளார். மேலும் பல படங்களில் நடிப்பதற்காக கவனம் செலுத்தி வருகிறார். அதனால் இவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் வெளியாக உள்ளன.

ரஜினி, சினிமாவில் பல சாதனைகள் படைத்துள்ளார். அவ்வாறு இவரது நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமான 2.o வெளியாகி வசூல் சாதனை படைத்தது.

இந்நிலையில் ரஜினியின் படங்கள் பல மொழிகளில் டப் செய்து வெளியாகும். அவ்வாறு தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியான ரஜினியின் படங்கள் பெரிய அளவில் வசூல் சாதனை படைத்துள்ளது. அதில் ரஜினியின் 2.0 படம் 50 கோடி வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் அண்மையில் பான் இந்திய படமாக வெளியான கே ஜி எஃப் 2. கன்னடத்தில் உருவான இப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு 43 கோடி வசூல் ஈட்டியுள்ளது. மேலும் படம் வெளியான சில நாட்களிலேயே இவ்வளவு வசூல் பெற்றுள்ளது.

இன்னும் சில தினங்களில் ரஜினி 2.o படத்தின் வசூலை கேஜிஎஃப் முறியடிக்கும். இதனால் பல வருடங்களாக தெலுங்கு சினிமாவில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்த ரஜினியின் இடத்தை தற்போது யஷ் பிடித்துள்ளார். மேலும் இதுவரை பல சாதனைகளை கே ஜி எஃப் படம் முறியடித்து வருகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →