விஜய் டிவியில் புதிதாக துவங்கப்பட்ட ஈரமான ரோஜாவே2 சீரியல் தொடக்கத்தில் ரொமாண்டிக் காதல் காட்சிகள் நிறைந்த சீரியலாக இருந்தது. அதன் பிறகு காதலித்த ஜோடியை, நிச்சயமான மற்றொரு ஜோடியுடன் மாற்றி மாற்றி திருமணம் செய்து வைத்து அவர்கள் தவிக்கும் தவிப்பை இந்த சீரியல் அழகாக காட்டுகிறது.
ஆகையால் துவங்கப்பட்ட சில நாட்களிலேயே சின்னத்திரை ரசிகர்களுக்கு இஷ்டமான சீரியலாக ஈரமான ரோஜாவே2 மாறிவிட்டது. இந்த சீரியலில் காவியா கதாபாத்திரத்தில் நடிக்கும் கேப்ரில்லா, பிக்பாஸ் மற்றும் ஒரு சில நடன நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்.
அப்போது எல்லாம் சிறுபிள்ளை போல் தெரிந்ததே கேப்ரில்லா, தற்போது சீரியல் நடிகையாக அதுவும் ஈரமான ரோஜாவே2 சீரியலில் கலெக்டராக வேண்டும் என்ற கனவோடு துடித்துக்கொண்டிருக்கும் காவியா கதாபாத்திரத்தில் கேப்ரில்லா கெத்து காட்டுகிறார்.
இதில் தன்னுடைய மகனை பார்த்தசாரதிக்கு திருமணம் செய்து வைக்க நினைத்த அத்தையிடம் சிக்கிகொண்ட கேப்ரில்லாவின் அக்கா ப்ரியாவை அவர்கள் கண்டபடி திட்டுகின்றனர்.
சட்டையை கழட்டி மாற்றுவது போல அக்கா தங்கைகள் வெட்கமில்லாமல் மாப்பிள்ளைகளை மாற்றி திருமணம் செய்து கொண்டார்கள் என கேலி கிண்டலுடன் பேசியது மட்டுமல்லாமல் டீ குடித்த டம்ளரை பிரியாவை கழுவ சொன்னது கேப்ரில்லாவுக்கு சுர்ருன்னு ஏறிவிட்டது.
அதன்பிறகு கேப்ரில்லா, ‘நாங்கள் இந்த வீட்டுக்கு மருமகளாக வந்திருக்கிறோம். உங்களுக்கு வேலைக்காரிகள் கிடையாது’ என பிரியாவை ஏளனமாக பேசி அவர்களை கேப்ரில்லா கிழித்து தொங்க விட்டாள். இவ்வாறு ஈரமான ரோஜாவே2 சீரியல் சூடு பிடிப்பதற்கு கேப்ரில்லா நடிக்கும் காவியா கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரிகிறது.