தமிழ் சினிமாவில் பாடல்களுக்காகவே பல படங்கள் ஹிட்டாகி உள்ளது. பெரும்பாலும் மைக் மோகன் படங்களில் இடம்பெறும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறும். அவ்வாறு படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மூலமே ஹிட்டான படங்களை பார்க்கலாம்.
அஞ்சான்: லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா, வித்யுத் ஜம்வால் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் அஞ்சான். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படத்திற்கு முத்துக்குமார், கபிலன், மதன் கார்க்கி ஆகியோர் பாடல் வரிகள் எழுதியிருந்தனர். இப்படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.
ரட்சகன்: பிரவீன்காந்த் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ரட்சகன். இப்படத்தில் நாகர்ஜுனா, சுஷ்மிதா சென் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். இப்படத்திற்கு வைரமுத்து மற்றும் வாலி பாடல் வரிகள் எழுதி இருந்தனர். சுஷ்மிதா சென் மற்றும் பாடல்களால் இந்த படம் ஹிட்டானது.
காதலர் தினம்: கதிர் இயக்கத்தில் குணால், சோனாலி பிந்த்ரே நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காதலர் தினம். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல் வரிகளும் வாலியால் எழுதப்பட்டது. மேலும் இப்படத்தில் உள்ள எல்லா பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
12 b: ஷாம், சிம்ரன், ஜோதிகா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் 12 b. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற பெரும்பாலான பாடல்களுக்கு வைரமுத்து பாடல் வரிகள் எழுதி இருந்தார். இப்படம் மிகக்குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டாலும் பாடல்களுக்காகவே நல்ல வரவேற்பு கிடைத்தது.
காதலில் விழுந்தேன்: நகுல், சுனைனா நடிப்பில் கடந்த 2008ல் வெளியான திரைப்படம் காதலில் விழுந்தேன். இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்து இருந்தார். இப்படத்தின் பாடல் வரிகளை தாமரை, பிவி பிரசாத் நெப்போலியன் மற்றும் பிரியன் ஆகியோர் எழுதியிருந்தனர். இப்படம் வெளியாவதற்கு முன்பாகவே இப்படத்தில் இடம்பெற்ற நாக்க முக்கா பாடல் உலக அளவில் ஹிட்டானது. மேலும் ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸை ஆட்டி படைத்தது இந்த பாடல். இந்தப் பாட்டுக்கு தோனி செம குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.