திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அடுத்த ருத்ரதாண்டவம் ஆட தயாராகும் மோகன்.. செல்வராகவனுடன் மோதப்போகும் கில்லாடி நடிகர்

பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் மூலம் தன்னுடைய பயணத்தை ஆரம்பித்து திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்களின் மூலம் அனைவரின் கவனத்தையும் பெற்றவர் இயக்குனர் மோகன் ஜி. கடைசியாக இவர் இயக்கிய ருத்ரதாண்டவம் திரைப்படம் வரவேற்பை பெற்ற அளவிற்கு சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

அந்த படத்தை தொடர்ந்து இவர் அடுத்து எந்த மாதிரியான கதையை இயக்கப் போகிறார் என்று பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில் அவர் தன்னுடைய அடுத்த படத்தை பற்றிய முக்கியமான அறிவிப்பு ஒன்றை தன்னுடைய சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளார்.

தன்னுடைய அடுத்த படைப்பு பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும், படத்தின் பெயர் பகாசூரன் என்றும் அறிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். ஒரு இயக்குனராக நம்மை பிரமிப்பில் ஆழ்த்திய செல்வராகவன் சமீபகாலமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் இவரின் நடிப்பில் தற்போது வெளியான பீஸ்ட் திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்துள்ளது. இதற்கு முன்பே அவர் நடிப்பில் உருவான சாணி காகிதம் படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

mohan-g-bagasuran
mohan-g-bagasuran

மேலும் இப்படத்தில் செல்வராகவனுடன் இணைந்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் நட்டி நட்ராஜ் நடிக்க இருக்கிறார். தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஒளிப்பதிவாளராக பிரபலமாக இருந்த இவர் தற்போது சதுரங்கவேட்டை, நம்ம வீட்டுப்பிள்ளை போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் இறுதியாக தனுஷின் கர்ணன் திரைப்படத்தில் நடித்திருந்தார் அதைத் தொடர்ந்து இந்த கூட்டணியில் அவர் இணைந்துள்ளார். படத்தின் பெயரே அனைவரின் எதிர்பார்ப்பையும் அதிகரித்த நிலையில் செல்வராகவன், நட்டி நட்ராஜ் இவர்களின் நடிப்பையும் இப்படத்தில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Trending News