மற்ற இயக்குனர்களை காட்டிலும் சற்று வித்தியாசமான கோணங்களில் தமிழ் சினிமாவை பார்ப்பவர் தான் இயக்குனர் பாலா. இவருடைய எல்லா படத்திலும் கிளைமாக்ஸ் காட்சிகள் நெகட்டிவாக தான் இருக்கும். இவர் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பெரும்பாலும் தேசிய விருதுகள் வாங்கி உள்ளனர்.
அவ்வாறு ஹீரோ, ஹீரோயின்களை படத்தின் கதாபாத்திரமாகவே வாழ செய்துவிடுவார். அது எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் சரி அதை ஒரிஜினலாக திரையில் காண்பிக்க வேண்டும் என்று மெனைகிடும் இயக்குனர் பாலா. இதனால் இவருடைய பெரும்பாலான படங்கள் விமர்சனரீதியாக பாராட்டுப் பெறும்.
பாலாவின் முதல் படம் சேது. பல போராட்டங்களுக்குப் பிறகு தான் அந்த படத்தை பாலா எடுத்து முடித்தார். இப்படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் நடிகர் விக்னேஷ். இவரும் பாலாவும் ஒரே ரூம் மேட்ஸ். அப்போது பல பிரச்சனைகளை சந்தித்தால் விக்னேஷ் ஆல் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனது.
அதை நினைத்து விக்னேஷ் தற்போதும் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். விக்னேஷ் தவிர மேலும் இரண்டு ஹீரோக்கள் இடமும் பாலா சேது படத்தின் கதையை சொல்லியிருக்கிறார். அந்த ஹீரோக்களும் சேது படத்தில் நடிக்க மறுத்துயுள்ளனர்.
அந்த ஹீரோ வேறுயாருமில்லை காதல் படங்களுக்கு பெயர் போன நடிகர் முரளி தான். மற்றொருவர் ஜே.டி சக்கரவர்த்தி. இவர் பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கன்னத்தில் முத்தமிட்டால், அரிமா நம்பி, சமர் போன்ற பல படங்களில் சக்கரவர்த்தி நடித்துள்ளார்.
இவர்கள் எல்லோரும் மறுக்கவே அந்த வாய்ப்பு விக்ரமுக்கு வந்து சேர்ந்தது. விக்ரம் அந்த கதாபாத்திரத்தை நேர்த்தியாக செய்து இருந்தார். மேலும் அவருக்கு சியான் விக்ரம் என்ற பெயரை சேது படம் வாங்கி தந்தது. மேலும் விக்ரமின் திரைவாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்த படமும் சேது தான்.