வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

உதயநிதியவே வளைத்துப் போட்ட லிங்குசாமி.. தெலுங்கு சினிமாவிற்கு கொடுக்கும் முக்கியத்துவம்

சமீப காலமாக சினிமா துறையில் பான் இந்திய பட கலாச்சாரம் அதிக அளவில் பெருகி வருகிறது. அதிலும் குறிப்பாக தெலுங்கு திரையுலகம் தான் அதிக அளவில் பான் இந்திய படங்களை எடுத்து வருகின்றது. அந்த வகையில் தெலுங்கு சினிமா அதிக அளவு பட்ஜெட்டை போட்டு படம் எடுக்கவும் தயாராக இருக்கிறது.

அப்படி உருவாகும் படங்களில் இங்கிருக்கும் தமிழ் ஹீரோக்களை நடிக்க வைத்து அதன் மூலம் அந்த படத்தை அனைத்து இடங்களிலும் அவர்கள் பிரமோஷன் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் பாகுபலி, புஷ்பா, ஆர்ஆர்ஆர் போன்ற படங்கள் பான் இந்திய திரைப்படங்களாக வெளிவந்து அதிக அளவில் வசூலை பெற்றது.

தற்போது நம் தமிழ் இயக்குனர் லிங்குசாமி தி வாரியர் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் இந்தத் திரைப்படமும் ஒரு பான் இந்திய திரைப்படம் தான். இதில் பிரபல நடிகர் ராம் போத்தனி, ஆதி, கீர்த்தி ஷெட்டி, நதியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் சென்னை பீனிக்ஸ் மாலில் ரிலீஸாக இருக்கிறது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள லிங்குசாமி நடிகர் உதயநிதியை அழைத்திருக்கிறார். அவரும் இதில் கலந்துகொண்டு பஸ்ட் சிங்கிளை ரிலீஸ் செய்ய இருக்கிறார்.

இதன்மூலம் லிங்குசாமி உதயநிதியையே வளைத்து விட்டதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. ஏனென்றால் சமீபகாலமாக தமிழ் சினிமா தெலுங்கு சினிமாவுக்கு தான் அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது. அதிலும் தெலுங்கில் பிரபலமாக இருக்கும் நடிகர்கள் பலரும் தமிழ் ரசிகர்களுக்கு அதிக அளவில் பரிச்சயமாகி இருக்கின்றனர்.

அதே போன்று தமிழில் பிரபலமாக இருக்கும் நடிகர்களும் தற்போது தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் எல்லா பக்கமும் இவர்களுக்கு ரசிகர்கள் பெருகி வருவது தான். இதன் மூலம் அவர்கள் ஒரே படத்தில் மூன்று நான்கு மடங்கு அதிக லாபம் பார்த்து விடுகின்றனர்.

இப்படி ஒரு எண்ணத்தில் தான் தமிழ் சினிமாவும் தெலுங்கு சினிமாவுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது. அதனால்தான் தெலுங்கு திரைப்படங்கள் அனைத்தும் மற்ற மொழிகளைக் காட்டிலும் தமிழில் அதிக அளவில் பிரமோஷன் செய்யப்பட்டு வருகிறது.

Trending News