திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ராதிகா குடும்பத்தை கெட்டியாக பிடித்துக் கொண்ட தளபதி.. இந்த ராசி ஒர்க் அவுட் ஆகுமா

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இந்நிலையில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்த விஜய்க்கு ஒரு சரிவாக பீஸ்ட் படம் அமைந்தது. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது.

இந்நிலையில் ராதிகா குடும்பத்தை சேர்ந்தவர்களுடன் விஜய் நடித்த படங்கள் எல்லாமே ஹிட் தான். முதலாவதாக அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2016 இல் வெளியான திரைப்படம் தெறி. இப்படத்தில் விஜய்க்கு அம்மாவாக ராதிகா நடித்திருந்தார்.

இப்படத்தில் ராதிகா யதார்த்தமான மற்றும் குறும்புக்கார அம்மாவாக நடித்திருந்தார். மேலும் இப்படம் விஜய்க்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. இதற்கு அடுத்தபடியாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2018 இல் வெளியான திரைப்படம் சர்கார். தேர்தலை மையப்படுத்தி வெளியான இப்படத்தில் வில்லி கோமளவள்ளி கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்து இருந்தார்.

அதேபோல் இப்படத்தில் ராதிகாவின் அண்ணன் ராதாரவியும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சர்கார் படம் வெளியாவதற்கு முன்பு பல சர்ச்சைகளில் சிக்கினாலும் படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. இந்நிலையில் விஜய் தற்போது தன்னுடைய 66 ஆவது படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபைலி இயக்குகிறார். இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது. மேலும் இப்படத்தின் பூஜையில் சரத்குமார் பங்கு பெற்ற புகைப்படங்கள் இணையத்தில் பரவியது.

இவ்வாறு ராதிகா குடும்பத்தில் உள்ள நபர்கள் விஜய் படத்தில் நடித்தால் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறுகிறது. இதனால் தளபதி 66 படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை விஜய்க்கு உள்ளதாம். பீஸ்ட் படத்தின் தோல்விக்கு பிறகு ஒரு வலுவான கூட்டணியில் விஜய் சேர்ந்ததற்கு பின்னணியும் இதுதான்.

Trending News