உச்சகட்ட அவமானத்தில் வெண்பா.. கிழி கிழினு கிழித்த தொங்க விட்ட ரேகா அம்மா

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் அமெரிக்காவில் இருந்து வெண்பாவை அழைத்து செல்வதற்காக அவளுடைய அம்மா சென்னை வந்திருக்கிறாள். வந்த பிறகுதான் வெண்பாவின் ஒவ்வொரு நடவடிக்கையும் சரி இல்லை என்பதை உணர்ந்த வெண்பாவின் அம்மா அவளை எப்படியாவது மீண்டும் அமெரிக்காவிற்கு அழைத்து செல்ல திட்டட்டமிடுகிறாள்.

அத்துடன் பாரதியைத் திருமணம் செய்து கொள்வதற்காக விஷப்பாம்பு மாறிவிட்ட வெண்பாவின் நடவடிக்கை அவளுடைய அம்மாவிற்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. இந்நிலையில் புதிய மருத்துவமனை திறப்பு விழாவிற்கு பாரதி அழைப்பு விடுத்ததன் பெயரில், வெண்பா அவளுடைய அம்மாவுடன் அங்கு சென்றிருக்கிறாள்.

அங்கு திடீரென்று வந்த போலீஸ் ஏற்கனவே ஒரு வழக்கில் மாட்டிக்கொண்ட வெண்பா, ஜாமினில் வெளிவந்த நிலையில் மாதம் ஒருமுறை அருகில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போட வேண்டும். ஆனால் அதை மூன்று மாதமாக செய்யாததால் நீதிமன்றம் அந்த ஜாமினை ரத்து செய்து தற்போது வெண்பாவை போலீஸ் கைது செய்ய வந்திருக்கிறது.

இதையெல்லாம் கேட்டறிந்த வெண்பாவின் தாய், ‘உன்னுடைய குணாதிசயம் தான் உன்னை இந்த நிலைமைக்கு ஆக்கி வைத்திருக்கிறது. நீ செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்து தான் ஆக வேண்டும்’ என வெண்பாவை அவளுடைய தாய் திட்டுகிறாள்.

அதன் பிறகு அம்மாவிடம் அழுது புலம்பும் வெண்பா, என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என கெஞ்சுகிறாள். இந்த சமயத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ளும் வெண்பாவின் அம்மா, அவளை அமெரிக்காவிற்கு மீண்டும் அழைத்து செல்வதுடன், அவர்களை நினைக்கும் மாப்பிள்ளைக்கும் திருமணம் செய்து கொள்ள வைக்க போகின்றனர்.

இந்த கண்டிஷனுக்கு எல்லாம் வெண்பா ஒத்துழைத்தால் மட்டுமே வெண்பாவின் அம்மா இந்தப் பிரச்சினையில் இருந்து அவளுக்கு உதவி செய்வேன் என்று கூறுகிறாள். வெண்பாவின் அம்மாவுக்கும் கண்ணம்மாவிற்கும் தேவையில்லாத வாக்குவாதமும் உரசலும் இருக்கும் நிலையில் வெண்பா அவளுடைய அம்மாவை தூண்டிவிட்டு கண்ணம்மாவை பழி வாங்குவதற்காகவே பாரதியை எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று சொல்லவும் வாய்ப்பிருக்கிறது.