ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

கே ஜி எஃப் இயக்குனரையே தூக்கி எறிந்த மகேஷ் பாபு.. கிடைத்தது அல்வா என கவ்விப் பிடித்த மாஸ் நடிகர்

கேஜிஎஃப் 2 தான் இப்போது நாடு முழுவதும் பேசப்படுகிறது. இந்த படம் இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டு வட்டாரங்களில் பெரிய வசூலை குவித்து வருகிறது. KGF 2 படத்தின் இமாலய வெற்றியானது, பிரசாந்த் நீல் மற்றும் பிரபாஸ் அடுத்து இணைந்துள்ள சலார் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்செயலாக, KGF 1 வெளியான பிறகு பிரசாந்த் நீலைத் தொடர்பு கொண்ட தெலுங்கு ஹீரோக்களில் மகேஷ் பாபுவும் ஒருவர். படத்தின் வெற்றிக்கு பாராட்டியது மட்டுமில்லாமல் தனக்கு ஒரு கதை தயார் செய்யும்படியும் கேட்டு கொண்டுள்ளார். அதற்காக ஹைதராபாத்தில் ஒரு அலுவலகமும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

பிரசாந்த் நீல் அவ்வாறு உருவாக்கி கூறிய கதை ஏனோ மகேஷ் பாபுவிற்கு பிடிக்காமல் போனதால், அதனை வேண்டாமென நிராகரித்துள்ளார். மகேஷ் பாபு வேண்டாம் என்று கூறிய கதை வேறு ஏதும் இல்லை, சலார் படத்தின் கதையே ஆகும்.

சரி எழுதிய கதையை வீணாக்க வேண்டாமென்று அதே கதையை பிரஷாந்த், பிரபாஸீடம் கூற அவர் அதை உடனே ஒப்புக்கொண்டுள்ளார். மகேஷ் ஸ்கிரிப்டை ஓகே செய்திருந்தால், KGFக்குப் பிறகு பிரசாந்துடன் பணிபுரியும் முதல் தெலுங்கு ஹீரோ அவராக தான் இருந்திருப்பார்.

இப்போது, KGF 2 இன் சூப்பர் வெற்றிக்கு பிறகு ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்த சலார் தற்போது நாடு முழுவதும் ஆவலோடு எதிர்பார்க்கும் படமாகியுள்ளது. ராதே ஷ்யாம் படம் தோல்வி அடைந்தாலும் பிரபாஸின் அடுத்தடுத்த படங்களில் வரிசையில் இது மிகவும் நம்பிக்கைக்குரிய படமாக கருதப்படுகிறது.

சலார் படத்தில் பிரபாஸூடன் இணைந்து ஸ்ருதிஹாசன் மற்றும் மலையாள முன்னணி நடிகரான பிரித்விராஜும் நடித்து வருகிறார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் பிளாக்பஸ்டராக மாறினால், தான் எடுத்த முடிவை மகேஷ் பாபு எண்ணி எண்ணி வருந்துவார். ஒரு நல்ல வாய்ப்பை அவர் கோட்டை விட்டு இருந்தாலும், அடுத்ததாக ராஜமௌலி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை உடனே ஓகே செய்துள்ளார்.

Trending News