இப்பொழுது பெரிய ஹீரோ படங்கள் ஆரம்பிக்கும் முன்னரே அது பிசினஸ் ஆகிறது. ஹிந்தி, தமிழ், தெலுங்கு எந்த மொழியாக இருந்தாலும் பெரிய ஹீரோக்கள், நல்ல இயக்குனர்கள் என்றால் அந்தப் படம் அப்பொழுதே மார்க்கெட்டில் விலை போகிறது.
ஆனால் விஜய் சேதுபதி போன்ற மாஸ் ஹீரோக்கள் இப்பொழுது மார்க்கெட் இல்லாமல் தவித்து வருகின்றனர். மார்க்கெட் இல்லையென்றால் நடிக்கும் படங்கள் வியாபாரம் ஆக கஷ்டப்படுகிறது.
ஒரு சில நடிகர்கள் கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என இன்றுவரை கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் நிலையில், சினிமாவில் எந்த கேரக்டரில் வேண்டுமானாலும் நடிக்கும் விஜய் சேதுபதி தொடர்ந்து பல படங்களில் வரிசையாக கமிட்டாகி கொண்டிருக்கிறார்.
இதனாலே வருடத்திற்கு குறைந்தது 12லிருந்து 15 படங்களாவது அவருடைய நடிப்பில் வெளிவந்து விடும். இதனால் மக்கள் செல்வன் என பெருமைப்படுத்தப்பட்ட விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு நிலைமையா என்று கோலிவுட் வட்டாரங்கள் ஆச்சரியத்தில் இருக்கின்றன.
சமீபத்தில் இயக்குனர் வெங்கட கிருஷ்ணா ரோகாந்த் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்த படம் யாதும் ஊரே யாவரும் கேளிர். இந்த படம் விஜய் சேதுபதியின் 33-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படம் ஒரு பக்கமும் வியாபாரம் ஆகவில்லை. இப்பொழுது விஜய் சேதுபதி மற்றும் படக்குழு என்ன செய்வதென்று விழித்துக் கொண்டிருக்கின்றனர்.