திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

வில்லங்கமான கேள்விக்கு பதில் சொன்ன நஸ்ரியா.. வாயைப் பிடுங்கி வம்பிழுத்த பிரபலம்

தமிழில் நடிகை நஸ்ரியா நேரம் படம் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களுக்கு பிடித்த கனவு நாயகியாகி போனார். பின்னர் ராஜா ராணி, நையாண்டி, திருமணம் என்னும் நிக்கா போன்ற படங்களில் தோன்றி ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார். மலையாளத்தை பூர்விகமாக கொண்ட இவர் 2014ஆம ஆண்டு தீடிரென மலையாள நடிகர் ஃபகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு, சினிமாவில் இருந்து விலகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

பின்னர் ஒரீரு மலையாள படங்களில் நடித்திருந்த இவர், தற்போது தமிழ் தெலுங்கில் நானி நடிப்பில் உருவாகியுள்ள “அன்டே சுந்தரனிகி” படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகவுள்ளார். இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் “அடடே சுந்தரா” மற்றும் “ஆஹா சுந்தரா” என பெயரிட்டப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் தமிழ் ரசிகர்களுக்கு நல்ல அறிமுகமான நானி நடித்துள்ள இந்த படம் ஜூன் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், படத்தின் டீசர் வெளியீட்டிற்கு முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பின் போது நஸ்ரியா ஒரு சங்கடத்தை எதிர்கொண்டார். முஸ்லீம் பெண்ணாக இருந்து, ஹிந்து பையனின் மனைவியாக லீலா தாமஸ் என்ற கிறிஸ்தவ பெண்ணாக நடித்துள்ளீர்கள். ஸ்கிரிப்டைத் தேர்ந்தெடுப்பதில் என்ன சிரமங்களை எதிர்கொண்டீர்கள்? எந்தக் கட்டத்தில் இந்தக் கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்தீர்கள்? என்று நிருபர் ஒருவர் கேட்டார்.

சிறிதும் யோசிக்காமல், நஸ்ரியா உடனடியாக, “நான் ஸ்கிரிப்டை விரும்பினேன், அதை விவேக் என்னிடம் விவரித்த கூறிய போது எனக்கு மிகவும் பிடித்து போனது. லீலா தாமஸ் வேடத்தில் நடிக்க நான் எதையும் பெரிதாக செய்யவில்லை. நான் லீலா தாமஸ் கதாபாத்திரத்தை புரிந்துகொண்டு அதற்கு தேவையானதை மட்டுமே இயக்குனர் என்ன விரும்புனாரோ அதைச் செய்து கொடுத்துள்ளேன்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, விவேக் ஆத்ரேயா இயக்கிய “அந்தே சுந்தராணிகி” படத்தின் டீஸரில் கடந்த புதன்கிழமை தமிழ், தெலுங்கு, மலையாளம் என மும்மொழிகளில் வெளியானது. நஸ்ரியா மற்றும் நானி கிறிஸ்தவ மற்றும் இந்து வேடங்களில் நடித்துள்ள இந்த படம் காதல் நகைச்சுவை படமாக உருவாகியுள்ளது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு படத்தில் தோன்றும் நஸ்ரியா, தனது அழகான வெளிப்பாடுகள் மற்றும் டயலாக் டெலிவரிகளால் மூலம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். நஸ்ரியா மட்டுமின்றி நானியும் தன்னுடைய டிரெட்மார்க் டயலாக் மூலம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.

Trending News