ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

சிம்ரனுடன் நடிக்க மறுத்த கருணாஸ்.. உங்களுக்கே இது ஓவரா தெரியல!

தமிழ் திரையுலகில் ஒரு காமெடி நடிகராக நுழைந்து இன்று ஒரு அரசியல்வாதியாகவும் இருப்பவர் நடிகர் கருணாஸ். பல திரைப்படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வந்த இவர் ஒரு சில திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து இருக்கிறார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த திண்டுக்கல் சாரதி என்ற திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று ஹிட்டானது. சிவ சண்முகன் இயக்கியிருந்த இந்தப் படத்தில் கருணாசுக்கு ஜோடியாக நடிகை கார்த்திகா நடித்திருந்தார்.

கதைப்படி இந்த படத்தில் அழகாக இருக்கும் மனைவியை சுமாராக இருக்கும் கணவன் சந்தேகப்படுவதும், அதனால் உருவாகும் பிரச்சனைகளைப் பற்றியும் காட்டப்பட்டிருக்கும். முதலில் தயாரிப்பு நிறுவனம் கருணாசுக்கு ஜோடியாக இப்படத்தில் நடிகை சிம்ரனை நடிக்க வைக்க முடிவு செய்திருந்தது.

ஆனால் இதை கேள்விப்பட்ட கருணாஸ் முடியவே முடியாது என்று ஒரேயடியாக மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் சிம்ரன் இந்த படத்தில் நடித்திருந்தால் கண்டிப்பாக இந்த படம் ஓடாது என்றும் அவர் கூறியிருக்கிறார். அதன்பிறகுதான் அந்த கேரக்டருக்கு நடிகை கார்த்திகா தேர்வு செய்யப்பட்டார்.

தற்போது கருணாஸ், சிம்ரன் அந்த படத்தில் நடிக்க கூடாது என்று ஏன் கூறினேன் என தெளிவுபடுத்தி இருக்கிறார். உண்மையில் ரொம்ப சுமாராக இருக்கும் எனக்கு கொஞ்சம் அழகான ஹீரோயினை கொடுத்தால் மட்டும் போதும். அதற்கு பதிலாக சிம்ரன் போன்ற பெரிய ஹீரோயின்களை எனக்கு ஜோடியாக போட்டால் அவ்வளவுதான் மக்கள் கொதித்து விடுவார்கள்.

படமும் கூடாது என்பதால்தான் நான் சிம்ரன் அந்த கேரக்டரில் நடிக்க கூடாது என்று கூறினேன். அதன்படி என் கணிப்பும் சரியாகத்தான் இருந்தது. நான் எதிர்பார்த்தபடி திண்டுக்கல் சாரதி திரைப்படமும் பயங்கர ஹிட் ஆனது என்று கருணாஸ் கூறியிருக்கிறார்.

Trending News