வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

தனுஷை மறைமுகமாக தாக்கும் ஐஸ்வர்யா.. இந்தப் பருப்பு எல்லாம் இங்கே வேகாது மேடம்

தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து 18 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது பிரிந்து வாழ்கின்றனர். இவர்களது மகன்கள் தாய் மற்றும் தந்தை இருவரிடம் மாறி மாறி இருந்து வருகின்றனர். விவாகரத்திற்கு முன்பு பெரிதாக சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இல்லாத ஐஸ்வர்யா தற்போது செய்து வரும் செயல் ரசிகர்களுக்கு கடுப்பை உண்டாக்கியுள்ளது.

விவாகரத்திற்கு பிறகு இருவரும் தங்களது வேலையில் பிஸியாக இருந்து வரும் நிலையில், அவ்வப்போது டுவிட்டரில் ஐஸ்வர்யா பதிவுகளை வெளியிட்டுள்ளார். மகன்களுடன் இருக்கும் புகைப்படம், ஜிம் வொர்க் அவுட் செய்யும் புகைப்படம், சைக்கிளிங் என்பது ஐஸ்வர்யாவிற்கு பிடிக்கும் நிலையில் அதிகாலை 4 மணிக்கு சைக்கிளிங் சென்றுள்ள புகைப்படங்கள் என பல்வேறு புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்

இதனை ஆதரித்த ரஜினி ரசிகர்களோ, நீங்கள் சந்தோஷமாக இருப்பது போன்று தலைவரையும் சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளனர். சில ரசிகர்கள் எதற்காக இப்படி நடிக்கிறீர்கள்? இத்தனை நாள் இந்த மாதிரி எந்த ஒரு புகைப்படமும் வெளியிடவில்லையே?

ஆனால் விவாகரத்து ஆன பிறகு தற்போது நீங்கள் சந்தோஷமாக இருப்பது காட்டிக் கொள்வதற்காக ஏன் தொடர்ந்து இந்த மாதிரியான புகைப்படங்களை வெளியிடுகிறீர்கள்! என கேட்டு வருகின்றனர். ஆனால் ஐஸ்வர்யா விவாகரத்து செய்ததிலிருந்தே கொஞ்சம் மனக்கசப்பில் இருந்து வருகிறார். ஆனால் வெளியில் இதனை தெரியபடுத்த கூடாது என்பதற்காகவே தான் சந்தோஷமாக இருப்பதாக சமூகவலைதளங்களில் புகைப்படம் வெளியிட்டு வருகிறார் என நெருக்கமான சிலர் கூறி வருகின்றனர்.

நடிகர் தனுஷ் நடிப்பில் 3 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஐஸ்வர்யா, பின்னர் வை ராஜா வை என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த இரு படங்களும் பெரிதாக வெற்றி பெறாததால், படம் இயக்குவதிலிருந்து ஒதுங்கியிருந்தவர். அண்மையில் இவர் இயக்கத்தில் வெளியான பயணி என்னும் ஆல்பம் சாங் வெளியானது.

தற்போது மீண்டும் இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து புதிய படம் இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இவருடைய பயணி பாடலை பாராட்டி நடிகர் தனுஷ் தன்னுடைய ட்விட்டரில் ஃப்ரெண்ட் என குறிப்பிட்டு அதை பகிர்ந்தது பெரும் சலசலப்பை உண்டாக்கியது குறிப்பிடத்தக்கது. விவாகரத்துக்கு பின்னரும் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறார்கள் என நெருங்கிய வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.

Trending News