திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

திருமணத்திற்கு ரெடியான நயன்தாரா விக்னேஷ் சிவன்.. இந்த ஆண்டில் எப்போது தெரியுமா!

நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கதாநாயகியாக நடித்த நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்து, இன்றுவரை எந்த சண்டை சச்சரவும் இன்றி நீடித்து வருகிறது. அந்தப் படத்திற்கு பிறகு தற்போது இவர்கள் இருவரும் மீண்டும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ இந்தப்படத்தில் நயன் நடிக்க, விக்கி இயக்குகிறார்.

இந்தப் படமும் வரும் 28-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. எனவே நயன்-விக்கி இருவரும் கடந்தாண்டு நிச்சயதார்த்தத்தை முடித்த நிலையில், எப்போது திருமணம் செய்துகொள்ள போகின்றனர் என நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

தற்போது விக்னேஷ் சிவன்-நயன்தாரா இருவரும் ஜூன் மாதம் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் நயன்தாராவின் சொந்த ஊரான கேரளா அல்லது வெளிநாட்டில் இவர்களது திருமணம் நடைபெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

எனவே நிச்சயதார்த்தத்தை போலவே திருமணத்தையும் ஆடம்பரம் இல்லாமல் அமைதியாக நடத்தி விடுவார்களா அல்லது பிரம்மாண்டமாக நடத்தப் போகிறார்கள் என கூடிய விரைவில் தெரிந்துவிடும்.

அதுமட்டுமின்றி இன்னும் இவர்களது திருமணத்திற்கு ஒரே மாதம் மட்டுமே இருப்பதால், ‘காத்துவாக்குல ரெண்டு’ காதல் படம்தான் இவர்களது கடைசி பேச்சுலர் படமாக இருக்கும்.

அதன் பிறகு இவர்கள் திருமணத்திற்கு பிறகுதான் அடுத்தடுத்த படங்களில் நடிக்கவும் இயக்கவும் போகின்றனர். ஆகையால் விக்கி-நயன் திருமண செய்தி கேட்ட அவர்களுடைய ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் இது குறித்து பரபரப்பாக பேசுவதுடன் அவர்களுக்கு இப்பொழுதிருந்தே வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

Trending News