புதன்கிழமை, ஜனவரி 15, 2025

காஜல் அகர்வாலை பார்த்து திருந்துங்க.. எல்லை மீறிய கோபத்தில் சமந்தா வெளியிட்ட பதிவு

சமந்தா தற்போது தமிழில் காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து சமந்தாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

அதில் சமந்தா மிகவும் கிளாமர் ஆகவும், டபுள் மீனிங் வசனம் பேசுவது போன்றும் நடித்திருக்கிறார். அந்தக் காட்சிகள் தற்போது பல விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. மேலும் இவர் தெலுங்கில் சாகுந்தலம், யசோதா போன்ற திரைப்படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

விவாகரத்துக்குப் பின்னர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா பல போட்டோக்களையும், கருத்துக்களையும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் ஆனால் அவற்றைப் பார்க்கும் ரசிகர்கள் அவரை தொடர்ந்து ட்ரோல் செய்யும் விதமாக கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் ரசிகர்கள் தற்போது சமந்தாவை நடிகை காஜல் அகர்வாலுடன் ஒப்பிட்டு கருத்து பதிவு செய்து வருகின்றனர். அதாவது காஜல் அகர்வால், அரவிந்த் கிச்சலு என்பவரை சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிக்க வந்த காஜல்அகர்வால் சில மாதங்களுக்கு முன் கர்ப்பமானார்.

அதைத் தொடர்ந்து படங்களில் நடிக்காமல் ஓய்வு எடுத்து வந்த அவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இதை குறிப்பிட்டு பேசும் ரசிகர்கள் காஜல் அகர்வால் என்னதான் பெரிய நடிகையாக இருந்தாலும் திருமணத்திற்குப் பிறகு குடும்பத்துக்கு முக்கியத்துவம் தருகிறார்.

அதனால்தான் அவர் தற்போது குடும்பம், குழந்தை என்று குடும்ப பெண்ணாகவே மாறி இருக்கிறார் என்று சமந்தாவை வம்பிழுப்பது போல் பேசி வருகின்றனர். இதனால் கடுப்பான சமந்தா கோபமாக ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கிறது, அதை மீறுபவர்களை நான் சும்மா விடமாட்டேன் என்று ரசிகர்களை எச்சரிப்பது போல் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Trending News