புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

பாலிவுட் கூட்டணியில் இணையும் சூர்யா.. எங்க போனாலும் நாங்க தான் கல்லா கட்டுவோம்

சமீபத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதைத் தொடர்ந்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள வாடிவாசல் படத்தில் நடித்துள்ளார். மேலும் இயக்குனர் பாலா உடன் சூர்யா மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளார். இப்படத்திற்கான படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்து வருகிறது.

இதைத்தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கயுள்ளார் என்ற செய்தி அண்மையில் வெளியானது. ஆனால் இதற்கு முன்னதாகவே சூரரைப்போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கை எடுக்க உள்ளதாக சுதா கொங்கரா அறிவித்தார். இந்நிலையில் இப்படத்திற்கான பூஜை தொடங்கியுள்ளது.

சூரரைப்போற்று படம் ஏர் டெக்கான் நிறுவனத்தை துவக்கியவரான கோபிநாத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டது. இப்படத்தை சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மூலம் தயாரித்து இருந்தார். சூரரை போற்று படம் கடந்த 2020இல் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று இருந்தது.

மேலும் இப்படத்திற்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்தது. இந்நிலையில் இப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கவுள்ளார். மேலும் இவருடன் இணைந்து ராதிகா மதனும் நடிக்கிறார். மேலும் இப்படத்திற்கான தலைப்பு இன்னும் வைக்கப்படவில்லை.

சூரரைப்போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கையும் சூர்யா, ஜோதிகாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதுவரை தமிழ் படங்கள் மட்டுமே தயாரித்து வந்த இந்நிறுவனம் முதல் முறையாக பாலிவுட் படத்தையும் தயாரிக்கிறது. இதை தனது சமூக வலைத்தள பக்கத்தில் சூர்யா வெளியிட்டுள்ளார்.

மேலும் சூர்யாவுக்கு சூரரைப்போற்று படம் தமிழிலேயே நல்ல வசூலை பெற்றுத் தந்த நிலையில் பாலிவுட்டிலும் இப்படத்தின் மூலம் நாங்கள் தான் கல்லா கட்டும் என சூர்யா இப்படத்தை தயாரிப்பதாக கூறப்படுகிறது. தமிழில் சூரரைப்போற்று படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் இந்தியில் இப்படம் ரசிகர்களை ஈர்க்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

akshay kumar
akshay kumar

Trending News