புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

சூர்யாவின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த போகும் 5 இயக்குனர்கள்.. 2 தேசிய விருதுக்கு வாய்ப்பு

சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க சூர்யா திட்டமிட்டிருக்கிறார். இதற்கு முன்பு பாலா இயக்கத்தில் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கவுள்ள சூர்யாவின் 41-வது சூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார்.

இந்த படத்தை ஒரே மாதத்தில் விறுவிறுப்பாக முடித்துவிட்டு வாடிவாசல் படப்பிடிப்பில் கலந்துகொள்ள சூர்யா பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார். வெற்றிமாறன்-சூர்யா முதல் முதலாக இணையும் இந்தப் படத்தை கலைப்புலி தாணு இந்த படத்தை தயாரிக்க உறுதியாகி உள்ளது.

வாடிவாசலை தொடர்ந்து சூர்யா நடிக்கும் அடுத்த படத்தை சுதா கொங்கரா இயக்கவிருக்கிறார்v   . ஏற்கனவே சுதா கொங்கரா சூரரைப்போற்று படத்தை சூர்யாவை வைத்து இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்தார்.

அதைத்தொடர்ந்து தற்போது சூர்யாவை வைத்து மீண்டும் பெரிய பட்ஜெட்டில் கேங்ஸ்டர் ட்ராமா திரைப்படத்தை சுதா கொங்கரா எடுப்பது முடிவாகி இருக்கிறது. மேலும் சூர்யா லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரில்லர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் வித்தியாசமாக தன்னை வெளிப்படுத்த உள்ளார் .

இந்தப் படம் தற்போது பேச்சுவார்த்தையில் உள்ளதால், விரைவில் இந்தப் படத்தை குறித்த முழு விபரமும் வெளியாக உள்ளது. அத்துடன் சூர்யா இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் திரில்லர்கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படமும் இன்னும் உறுதி ஆகாமல் இருக்கும் நிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது.

ஆகையால் சுமார் ஐந்து படங்களை தற்போது கையில் வைத்துக் கொண்டிருக்கும் சூர்யா கால்ஷீட்டை யாருக்கு கொடுப்பது என தெரியாமல் அலை மோதுகிறார். அதுமட்டுமின்றி சூர்யாவின் ஒரு சில படங்களுக்கான தயாரிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ஐந்து பட  இயக்குனர்களில் கண்டிப்பாக 2 தேசிய விருது உறுதி என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். இதனால் சூர்யாவின் மார்க்கெட் அசுர வளர்ச்சி அடையும்.

Trending News