வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

பொங்கல், இட்லி என அரைத்த மாவை அரைக்கும் சமையலம்மா.. வாயடைத்துப் போன பாரதி

விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதிகண்ணம்மா. தற்போது இத்தொடரில் புது என்ட்ரி ஆக வந்திருக்கும் விக்ரம் தற்போது மருத்துவமனை ஒன்று திறந்துள்ளார். இந்த மருத்துவமனையில் அட்மினிஸ்ட்ரேட்டராக கண்ணம்மா வேலை பார்க்கிறார். இதனால் பாரதியும், கண்ணம்மாவும் அடிக்கடி சந்திக்க அதிக வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் மருத்துவமனையில் கேன்டீனில் சாப்பிடுவதற்காக பாரதி வருகிறார். அங்கு கண்ணம்மா ஏதாச்சும் சாப்பிடுறீங்களா என பாரதியிடம் கேட்கிறார். அதற்கு உடனே பாரதி உன்னுடைய மாவையெல்லாம் எல்லாம் இங்க விக்கலாம்னு பாக்குறியா என கிண்டல் அடிக்கிறார்.

அதற்கு கண்ணம்மா சரியான பதிலடி கொடுக்கிறார். அதாவது என்னுடைய மாவுக்கு பெரிய டிமாண்ட் இருக்க. இங்க வந்து தான் விக்கணும் என்ற நிலைமையில் நான் இல்லை. என்கிட்ட மாவு கேக்குறவங்களுக்கு என்னால குடுக்க முடியல இதுல இங்க வந்து கொடுக்கணும்னு எந்த அவசியம் எனக்கு இல்லை என சரியான பதிலடி கொடுக்கிறார்.

மேலும் நான் சமையல் அம்மா இல்ல, அட்மின் ஆபீசர் என பாரதியை கதற விடுகிறார் கண்ணம்மா. மேலும், வரகு அரிசியில புதுசா பொங்கல் ட்ரை பண்ணி இருக்கோம் கொண்டு வர சொல்ல வா என பாரதியை கடுப்பேத்துகிறார். எதுவும் சொல்ல முடியாமல் பாரதி அப்படியே அமைதியாக உள்ளார்.

இதனால் இனிமேல் அடிக்கடி பாரதி, கண்ணம்மா இடையே கருத்து சண்டைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இந்நிலையில் வெண்பாவை அவரது அம்மா ஷர்மிலா வழக்கில் இருந்து காப்பாற்றி அழைத்து வருகிறார். மேலும் நாளைக்கே உனக்கு மாப்பிள்ளை பார்க்கிறேன் என அதிரடியாக களத்தில் இறங்கியுள்ளார் ஷர்மிளா.

இதனால் வெண்பா இதிலிருந்து எப்படி தப்பிப்பது என பல விஷயங்களை யோசித்து வருகிறார். மேலும் பாரதி, கண்ணம்மா இடையே ஏற்படும் நெருக்கத்தினால் ஒருவேளை வெண்பா திருமணத்திற்கு சம்மதிக்கவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு பல புதிய திருப்பங்களுடன் பாரதிகண்ணம்மா தொடர் சென்று கொண்டிருக்கிறது.

Trending News