சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ஆத்தி, இது என்ன புது twist-ஆல இருக்கு.. அதிரடி திருப்பங்களுடன் தென்றல் வந்து என்னை தொடும்

விஜய் டிவியில் மதிய நேர தொடரில் ரசிகர்களின் பேவரைட் தொடராக ஒளிபரப்பாகி வருகிறது தென்றல் வந்து என்னைத் தொடும். இத்தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் பவித்ரா மற்றும் வினோத் பாபு இருவரும் நடிக்கின்றனர். இத்தொடரை ப்ரைம் டைமுக்கு மாற்றுங்கள் என பலர் கோரிக்கை வைக்கின்றனர்.

அந்தளவுக்கு இத்தொடர் ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளது. இத்தொடரின் கதாநாயகி அபிநயா நீதிபதியின் மகள். இந்நிலையில் இவருடைய அனுமதி இல்லாமலேயே லோக்கல் ரவுடியாக வெற்றி அபிநயா கழுத்தில் தாலி கட்டிவிட்டார். மேலும் தாலி சென்டிமென்ட் ஆல் வெற்றி வீட்டிற்கு வந்த வாழ்கிறார் அபிநயா.

ஆனால் அங்கு சென்ற பிறகு வெற்றியின் நல்ல குணத்தை பார்த்து அபிக்கு வெற்றி மேல் காதல் ஏற்படுகிறது. ஆனால் வெற்றிக்கு அபி என்றால் சுத்தமாக பிடிக்காது. இவ்வாறு இவர்களுக்குள் நடக்கும் காதல் காட்சிகள், சண்டைகள் என ரசிகர்களை கவரும் விதமாக தினமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது.

இந்நிலையில் அபியின் தந்தையை சில ரவுடிகள் கடத்திச் செல்கின்றனர். அந்த விஷயம் அபிக்கு தெரிய வெற்றியிடம் உதவி கேட்கிறார். இந்த ரவுடிங்க எங்க அப்பாவை கொன்னாலும் கொன்னுடுவாங்க தயவுசெய்து காப்பாற்று என கெஞ்சுகிறாள். இந்த சந்தர்ப்பத்தை சுயநலமாக பயன்படுத்திக் கொண்ட வெற்றி உங்க அப்பாவை நான் காப்பாத்தி கூட்டிட்டு வரேன்.

ஆனால் நீ தாலியை கழட்டி வச்சுட்டு, உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, என் வாழ்க்கை விட்டும் இந்த வீட்டை விட்டு போறேன்னு எழுதி கொடுக்கணும் என வெற்றி கூறுகிறார். மேலும் அபியும் எழுதிக் கொடுக்கிறன், உன்னை விட்டு போறேன் நான் மனப்பூர்வமாக எழுதிக் கொடுக்கிற என வெற்றிடம் வாக்குக் கொடுக்கிறார்.

இதனால் வெற்றியும் அபியின் தந்தையை எப்படியும் காப்பாற்றி விடுவார். மேலும் அபி, வெற்றியின் வாழ்க்கையை விட்டு சென்ற பிறகுதான் அபியின் காதல் மற்றும் அருமை வெற்றிக்கு புரியவரும். இதனால் இனி மிக சுவாரசியமான கதைக்களத்துடன் தென்றல் வந்து என்னைத்தொடும் தொடர் இருக்கப்போகிறது.

Trending News