வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

என்னது ராஜமௌலி படமா.? வேண்டாம் சாமி என டாட்டா காட்டி எஸ்கேப் ஆன இயக்குனர்

பிரம்மாண்ட இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி தன்னுடைய பாகுபலி மற்றும் ஆர் ஆர் ஆர் போன்ற படைப்புகளின் மூலம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளார். மேலும் அவருடைய படத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் இவர் படத்தில் நடித்த பிறகு அந்த நடிகர்களின் மார்க்கெட் பல மடங்கு உயருகிறது.

இந்நிலையில் அடுத்ததாக ராஜமவுலி இயக்கும் படத்தில் மெகா ஸ்டாரான மகேஷ்பாபு நடிக்கிறார். இப்படமும் மிக பிரம்மாண்டமாக உருவாகயுள்ளது. இது ஒரு பக்கமிருக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் மாதம் வெளியாக உள்ளது.

இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ், விஜய் படத்தை இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது. விஜய் தற்போது தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்த பிறகு தான் லோகேஷ் உடன் விஜய் இணைய உள்ளார். இதனால் இந்த இடைப்பட்ட காலத்தில் மகேஷ்பாபு படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருந்தார்.

ஆனால் ராஜமௌலி படம் என்றால் அவ்வளவு சர்வ சாதாரணம் இல்லை. அவர் ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட இரண்டு, மூன்று வருடங்கள் எடுத்துக் கொள்கிறார். ஏற்கனவே இவர் இயக்கத்தில் உருவான பாகுபலி, ஆர் ஆர் ஆர் படங்களுக்கு வருடக்கணக்கில் எடுத்துக் கொண்டார்.

அதுமட்டுமன்றி ராஜமவுலி இயக்கும் படத்தில் மகேஷ் பாபுவின் கெட்டப் மிகவும் வித்தியாசமாக இருக்கும். இதனால் லோகேஷ் கனகராஜ் படத்தில் அதே கெட்டப்பில் மகேஷ்பாபுவால் நடிக்க முடியாது. இதனால் லோகேஷ் இடம் கொஞ்சம் அவகாசம் கேட்டுள்ளார் மகேஷ் பாபு. இதனால் எப்படியும் இந்தப் படம் முடிய இரண்டு, மூன்று வருடங்கள் ஆகும்.

இதை யோசித்த லோகேஷ் நாசுக்காக முடியாது சாமி என டாட்டா காட்டி எஸ்கேப் ஆகிவிட்டாராம். இதனால் தளபதி 67 படத்தை இயக்குவதற்கு முன்பாக வேறு ஒரு நடிகரை வைத்து படம் இயக்கும் முயற்சியில் உள்ளார். மேலும் மகேஷ் பாபுக்கு பதிலாக யார் அந்த படத்தில் நடிக்கவுள்ளார் என்பது விரைவில் வெளியாகும்.

Trending News