தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் மணிவண்ணனின் உதவி இயக்குனராக இருந்து அதன்பிறகு முறைமாமன் என்ற நகைச்சுவை திரைப்படத்தின் வாயிலாக இயக்குனராக அறிமுகமானவர் சுந்தர் சி. இதைத்தொடர்ந்து வின்னர், நாம் இருவர் நமக்கு இருவர், லண்டன், கலகலப்பு போன்ற காமெடி கதைகளை இயக்குவதில் சுந்தர் சி வல்லவர்.
இவர் எடுத்த காதல் கலந்த காமெடி கதைகளுக்கு இன்றுவரை மவுசு அதிகம். காமெடி கதைகளை மட்டும் எடுக்காமல் இப்பொழுது சில பேய் படங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அதுமட்டுமின்றி கடந்த 2006ஆம் ஆண்டு தன்னை இயக்குனராக மட்டுமின்றி கதாநாயகனாகவும் தலைநகரம் படத்தின் மூலம் என்ட்ரி ஆனார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த இருட்டு, அரண்மனை போன்ற படங்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஹிட்டடித்தது. இந்நிலையில் தற்சமயம் ஹிட் படங்கள் கொடுக்க முடியாமல் தவித்து வரும் ஒரு நடிகர் இப்பொழுது சுந்தர் சி படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
அந்தப் படத்தை மட்டுமே மலைபோல் நம்பி இருக்கிறார். ஏனென்றால் படம் ஓடாவிட்டாலும் மக்கள் நம்மளை மறக்காமல் இருக்கும்படி ஒரு கேரக்டரில் நடித்து விட வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகிறார்.
என்றென்றும் புன்னகை, கலகலப்பு-2 போன்ற படங்களைத் தவிர நடிகர் ஜீவாவுக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படம் இல்லை. இப்பொழுது சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த படமாவது கைகொடுக்குமா என்று சுந்தர் சி-யை ஆலமரம் போல் நம்பியிருக்கிறார். எனவே கலகலப்பு 2 படத்திற்கு பிறகு மறுபடியும் சுந்தர் சியுடன் இணையும் ஜீவா பெரிய எதிர்பார்ப்புடன் நம்பி இறங்கியுள்ளார்.