சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ஒடிடி ஹீரோக்கள் என முத்திரை குத்தப்பட்ட 6 நடிகர்கள்.. மார்க்கெட்டில் இல்லைனா இப்படியா?

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒடிடிகள் தலைதூக்கியது. அதாவது கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக திரையரங்குகளை மூட அரசு உத்தரவிட்டது. இதனால் பல நடிகர்களும் தங்களது படங்களை ஒடிடியில் வெளியிட்டு வந்தனர். மேலும் தற்போது திரையரங்குகள் திறக்கபட்டாலும் அவர்கள் ஒடிடிலேயே படங்களை வெளியிட்டு வருகின்றனர். இதனால் தற்போது அவர்களை ஓடிடி ஹீரோக்கள் எனவே முத்திரை குத்தப்பட்டுள்ளனர்.

ஜீவா : தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவராலும் அறியப்படுபவர் நடிகர் ஜீவா. இவர் நடிப்பில் வெளியான ராம் மற்றும் கற்றது தமிழ் படங்கள் ரசிகர்களின் கவனம் பெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜீவா நடிப்பில் வெளியாகும் படங்கள் ஒடிடியில் தான் வெளியாகிவருகிறது. ஆனால் அதில் எந்த படமும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

அருண் விஜய் : ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்ததை விட தற்போது வில்லன் அவதாரம் எடுத்திருக்கும் அருண் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. அதை அப்படியே தக்க வைப்பதற்காக வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அருண்விஜய் நடித்து வருகிறார். கடைசியாக அருண் விஜய் தனது மகனுடன் நடித்த ஓ மை டாக் படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது.

ஆர்யா : அதிக பெண்கள் ரசிகர்களால் கவரப்பட்ட நடிகர் நடிகர் ஆர்யா. இவருடைய டெடி மற்றும் சார்பட்டா பரம்பரை படங்கள் ஒடிடியில் வெளியானது. மேலும் சார்பட்டா பரம்பரை படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. மேலும் இப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தால் நல்ல அங்கீகாரம் கிடைத்திருக்கும்.

விமல் : கிராமம் கதையம்சம் கொண்ட படங்களில் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்றவர் நடிகர் விமல். இவருக்கு கடந்த இரண்டு வருடங்களாக படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. இவருடைய படங்களும் ஒடிடியில் வெளியாகி மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தது. மேலும் இதனால் பல தயாரிப்பாளர்களும் தற்போது இவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

கலையரசன் : மெட்ராஸ் படத்தில் தன்னுடைய நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் கலையரசன். இதை தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம், சார்பட்டா பரம்பரை, லாபம், உடன்பிறப்பே போன்ற படங்கள் ஓடிடியில் வெளியானது.

விக்ரம் பிரபு : திரை குடும்பத்தில் இருந்து வந்த விக்ரம் பிரபு தற்போது வரை நிலையான இடத்திற்காக போராடி வருகிறார். ஆரம்பத்தில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் நேரடியாக தொலைக்காட்சி அல்லது ஒடிடியில் வெளியாகி வருகிறது.

Trending News