விக்னேஷ் சிவன் ஆசையில் விழுந்த மண்.. முதலில் இத பண்ணிட்டு வா என மறுத்த நயன்தாரா

தென்னிந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகை நயன்தாரா கடந்த ஆறு வருடங்களாக இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் இருந்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்த ஜோடி சில ஆண்டுகளுக்கு முன்பு ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வருவது, குடும்ப விழாக்களை சேர்ந்தே கொண்டாடுவது என கிட்டத்தட்ட ஒன்றாக தான் வாழ்ந்து வருகிறார்கள்.

நயன் மற்றும் விக்கி திருமணத்தைப் பற்றிய செய்திகள் கிட்டத்தட்ட மாதத்திற்கு ஒரு முறை ஊடகங்களில் பேசும் தலைப்பாக உள்ளது. அவர்கள் திருமணம் குறித்து எப்போதும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அந்த கேள்விக்கு அவர்களின் காதல் வாழ்க்கையில் சலிப்படையும்போது தனது காதலியை திருமணம் செய்து கொள்வேன் என்று கிண்டல் செய்தார்.

தற்போது இவர்களது திருமணம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. நயன் மற்றும் விக்கி இருவரும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து இந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த திருமணம் கேரளாவிலோ அல்லது வெளிநாட்டிலோ நடக்கும் என்றும், நெருங்கிய குடும்பத்தினர் மட்டும் கலந்துகொள்ளும் வகையில் மிகவும் தனிப்பட்ட முறையில் நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் திரையுலகம் மற்றும் அரசியலில் யார் யாரெல்லாம் அழைக்கப்படுவார்கள் என்று பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகிறது. ஒரு வாரம் கழித்து திருமணத்திற்கான ஏற்பாடுகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. தங்களது திருமணம் குறித்து விக்னேஷ் சிவன் கூறுகையில், நயனிற்கு சிறப்பான ஒரு வெற்றி படம் கொடுத்த பின் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என முடிவெடுத்துள்ளார் என கூறினார்.

2022 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் திரைக்கு வரவுள்ள ‘AK 62’ படத்தில் அஜித் குமாரை இயக்கும் முன் விக்னேஷ் சிவன் திருமணம் செய்து கொள்ள ஆர்வமாக இருப்பதாகவும் அதே வட்டாரங்கள் கூறுகின்றன. அவர்களின் திருமண நாள் நெருங்கி வருவதாக நெருங்கிய வட்டாரங்கள் உறுதியளிக்கின்றன.

எப்படியும் வருகிற 28ஆம் தேதி வெளியாக உள்ள “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தை நயன் கூறிய படியே சிறந்த படமாக கொடுத்து அவரை விரைவில் கை பிடிக்க வேண்டும் என விக்னேஷ் சிவன் படத்தை பார்த்து பார்த்து செதுக்கி வருகிறார்.