புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

இடுப்பழகியை கல்யாணம் செய்ய ஆசைப்பட்ட ரசிகர்.. என்ன பதில் கூறினார் தெரியுமா.?

ஆரம்பத்தில் ரம்யா பாண்டியன் நடித்த படங்கள் எதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. அதன் பிறகு மொட்டை மாடியில் எடுத்த கவர்ச்சியான போட்டோ சூட் புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் ரம்யா பாண்டியன் வெளியிட்டிருந்தார். அந்த போட்டோவால் ஒரே நாளில் உலக பேமஸ் ஆனால் ரம்யா பாண்டியன்.

மேலும் இதை தொடர்ந்து விஜய் டிவியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தன்னுடைய சிறந்த சமையல் திறமையை காட்டி இருந்தார். அதன்பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

அதில் தனது புத்திசாலித்தனத்தை பயன்படுத்திக்கொண்டு பல வாரங்கள் அந்த வீட்டுக்குள் அவரால் தாக்கு பிடிக்க முடிந்தது. இந்நிலையில் ரம்யா பாண்டியன் மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு சூர்யா தயாரிப்பில் வெளியான ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படத்தில் கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரம்யா பாண்டியனை ஏராளமானோர் பின்தொடர்கின்றனர். இந்நிலையில் ரம்யா பாண்டியன் ரசிகர்களுடன் கலந்துரையாட லைவ்வில் வந்துள்ளார். அப்போது ஒருவர் நான் உங்களுடைய தீவிர ரசிகர், என்ன கல்யாணம் செய்து கொள்கிறீர்களா.?

அதற்கு பதிலளித்த ரம்யா பாண்டியன், எனக்கான கணவரை நான் கண்டு பிடிக்கும் போது அவருக்கும் என்னைப் பிடிக்க வேண்டும். அதனால் இப்போதைக்கு உனக்கு வாய்ப்பில்லை ராஜா என பதிலளித்துள்ளார். இந்நிலையில் இப்போதே 31 வயதைக் கடந்த ரம்யா பாண்டியன் இன்னும் திருமணத்தை எத்தனை ஆண்டுகள் கடத்துகிறார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆனால் ரம்யா பாண்டியன் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடித்த பிறகுதான் மற்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என உறுதியாக உள்ளார். இதனால் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி அதில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார் ரம்யா பாண்டியன்.

Trending News