விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் சமையல் அம்மாவாக இருந்த கண்ணம்மா தற்போது, பாரதி முதன்மை மருத்துவராகப் பணியாற்றும் மருத்துவமனையில் அட்மிட் ஆபீஸராக வேலை பார்க்கிறாள். இன்று மருத்துவமனைக்கு தலையில் அடிபட்டு ரத்தம் சொட்ட சொட்ட தன்னுடைய மனைவியை அழைத்து கொண்டு ஒருவன் வருகிறான்.
அவனிடம் கண்ணம்மா எப்படி அடிபட்டது என கேட்க, பாத்ரூமில் தவறி விழுந்து விட்டாள் என்று சொல்கிறான். ஆனால் அடிபட்ட அந்த பெண்ணிடம் கேட்கும் போது, கண்ணாடி பொருள் தலையில் விழுந்தது என சொல்கிறாள். இப்படி கணவன் மனைவி இருவரும் மாற்றி மாற்றி பொய் பேசுவதால் கணவன் மீது ஏதோ தவறு இருக்கிறது என பாரதி, கண்ணம்மாவிடம் கூறுகிறாள்.
உடனே பாரதி, ‘இந்த உலகத்தில் இருக்கிற ஆம்பளைகள் எல்லாம் தவறு செய்வார்கள் என்று நினைத்துக்கொண்டு பேசுகிறாயா?’ என கண்ணம்மாவை திட்டுகிறான். அதன் பிறகு பாரதி அடிபட்ட அந்த பெண்ணிடம் கேட்ட போது, ‘தன்னுடைய கணவர் யார் கூட நின்று பேசினாலும் அவர்களுடன் தொடர்பில் இருப்பதாக அடித்து கொடுமைப் படுத்துகிறான்’ என கூறுகிறாள்.
உடனே போலீசுக்கு போன் செய்து அவனை அடித்து இழுத்துட்டு போகின்றனர். இதன் பிறகு பாரதி கண்ணம்மா சந்தேகப்பட்டு இப்படி தான் தவறாக நினைத்துக் கொண்டு இருக்கிறாள் என்பதால், இந்த சம்பவம் அவனுக்கு ஏதாவது மாற்றத்தை பாரதிக்கு ஏற்படுத்தும் என சீரியல் ரசிகர்கள் நம்புகின்றனர்.
இருப்பினும் தனக்கு ஆண்மை இல்லாத போது குழந்தை பெறுவது எப்படி என்ற கேள்வி மட்டும் பாரதிக்கு இருந்து கொண்டே இருக்கிறது. இதற்கு ஒரே ஒருமுறை டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து விட்டால் பாரதிகண்ணம்மா இருவருக்கும் இடையே இருக்கும் மனக்கசப்பு சரியாகிவிடும்.
ஆனால் மருத்துவமனையிலேயே இருக்கும் இருவருக்கும் அதை மட்டும் செய்ய தோன்றாது. அப்படி தோன்றினால் சீரியல் முடிந்து விடும் என்பதற்காகவே இப்படி நம்மளை எல்லாம் முட்டாளாக்கி கொண்டிருக்கின்றனர்.