திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

ஹீரோவுடன் அட்ஜஸ்ட் செய்ய மறுத்த நடிகை.. கை நழுவிப் போன பட வாய்ப்பு

தற்போது எல்லா இடங்களிலும் பாலியல் தொடர்பான புகார்கள் அதிகரித்து வருகின்றன. அதிலும் திரையுலகில் இது கொஞ்சம் அதிகப்படியாக இருக்கிறது. தங்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகளை நடிகைகள் பலரும் தற்போது பொதுவெளியில் வெளிப்படையாக கூறி வருகின்றனர்.

அந்த வகையில் பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்த ஒரு நடிகையும் இதுபோன்ற ஒரு பிரச்சனையை சந்தித்து இருக்கிறார். ஹிந்தியில் ஏராளமான திரைப்படங்களில் நடித்த அந்த நடிகையை தமிழிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழில் கேப்டன், தளபதி நடிகர் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை தமிழ் ரசிகர்களுக்கு ரொம்பவே பரிச்சயமான முகம் தான். இவர் பிரபல ஹீரோ ஒருவருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.

அந்தப் படத்தை தயாரித்தவரும் ஒரு பிரபலம் தான். அந்த தயாரிப்பாளர் நடிகையிடம், சம்பந்தப்பட்ட ஹீரோவுடன் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறார். இதனால் அதிர்ந்து போன நடிகை, நடிகருக்கே போன் செய்து இது பற்றி பேசியிருக்கிறார்.

அதற்கு அந்த நடிகரும் நடிகையை தனியாக சந்திக்க வரும்படி கூறி இருக்கிறார். இதனால் கடுப்பான நடிகை தயாரிப்பாளரிடம் நான் நடிக்க தான் வந்திருக்கிறேன், நடிப்பைத் தவிர வேறு எந்த விஷயத்திலும் நான் சமரசம் செய்ய முடியாது என்று முகத்தில் அடித்தது போல பேசினாராம்.

இதனால் கடுப்பாகிப் போன அந்த தயாரிப்பாளர் அந்த நடிகையை நீக்கிவிட்டு வேறு ஒரு ஹீரோயினை அந்த படத்தில் புக் பண்ணியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தனக்கு தெரிந்த சில தயாரிப்பாளர்களிடமும் கூறி நடிகைக்கு கிடைக்க இருந்த பட வாய்ப்புகளையும் கிடைக்காமல் செய்து விட்டாராம்.

இதனால் சில காலம் படவாய்ப்புகள் இன்றி தவித்த நடிகை தற்போது மீண்டும் தமிழில் கடவுள் பெயரை கொண்ட அந்த ஹீரோவின் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். இதன்பிறகு நிச்சயம் தமிழில் ஒரு ரவுண்டு வருவேன் என்று நடிகை தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறாராம்.

Trending News